
மஹாபெரியவா காமகோடி கோஷஸ்தானத்தின் மூலம் 1944 ஆம் ஆண்டு தமிழில் பொருளுடன் வெளியிட்ட மூகபஞ்சசதீ ஸ்தோத்திரத்தின் நல்ல பிரதி இந்த இணைப்பில் இப்போது கிடைக்கிறது. 90 mb (a very good scanned copy of mooka pancha shathi published by Mahaperiyava in 1944 available in this link. Large file warning – 90 mb file) –>
மூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு
கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் இந்த புத்தகத்தில் இருந்துதான் எனக்கு மூக பஞ்சசதீ வாசித்தார்கள். இந்த ஸ்தோத்திரத்தின் தமிழாக்கம் எஸ்வி ராதாகிருஷ்ண சாஸ்திரிகள், கணேச ஐயர் மேலும் பலர் செய்திருந்தாலும், மேற்கண்ட புத்தகத்திலுள்ள தமிழாக்கம் மஹாபெரியவா தானே சரிபார்த்து, பல அழகான குறிப்புகளை சேர்த்திருப்பதால் சிறந்ததாக உள்ளது என்று ஸ்வாமிகள் சொல்வார்கள். இந்தப் புத்தகம் இப்போது அச்சில் இல்லை. இதை இணையத்தில் வெளியிட்டு காமகோடி மடம் பேருபகாரம் செய்துள்ளது.
இந்தப் புத்தகத்தின் ஸ்ரீமுகத்தில் தான் மஹாபெரியவா தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் மூகபஞ்சசதீயின் மகிமையை ஐந்து ஐந்து பக்கங்களில் சொல்லியுள்ளார்கள். அந்த ஸ்ரீமுகத்தின் ஒலிப்பதிவையும் முக்கியத்துவத்தையும் இந்த இணைப்பில் பார்க்கலாம் –> மூகபஞ்சசதீ – மஹாபெரியவா ஸ்ரீமுகம் தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் (audio and transcript)