Sage of Kanchi

நீ ஆத்துக்கு வரணும், ஆத்துக்கு வரணும் னுதானேடா கூப்பிட்டுண்டிருந்தே

Thanks for the FB share.

I thought I have shared this in the past but looks like not. Very blessed experience by Sri Silpi.

Periyava Sharanam!

சில்பி”யின் மனைவி பரமாச்சார்யரின் பக்தை. உடல் உபாதையால் காஞ்சிக்கு செல்லமுடியாத நிலையில் கணவனை கேட்டாள் :

”எனக்கு பெரியவா படம் ஒன்று நீங்க வரைந்து கொடுங்கோ, அதை பார்த்து பூஜை பண்ணிண்டிருக்கேன்”
1956ல் மனைவியின் ஆசையை பூர்த்தி செய்ய பெரியவாளின் படம் வரைய அனுமதி கேட்டார். முதல் முறையாக மஹா பெரியவாளை சந்திக்க ”சில்பி” க்கு அனுமதி கொடுத்தார் பெரியவர்.

”ராத்திரி வா எல்லா வேலையும் முடிஞ்சப்புறம் ”

பெரியவாளை படம் வரைவது கடினம். ”கொஞ்சம் அசையாமல் அப்படி இருங்கள் என்று அவரிடம் சொல்லமுடியுமா?” எப்படியோ சில்பி அவரை ”பிடித்து” விட்டார். அதை இணைத்திருக்கிறேன்.

அந்த இருட்டறையில் ஒரு எண்ணெய் தீபம் மட்டும் ஒளி வீசியது. எதிரே ஞான ஒளி அமர்ந்திருந்தது. அந்த ஞானப் பிழம்பின் கண்களில் ஆன்ம ஒளி. பயபக்தியோடு கைகள் சற்று பக்தியால் மரியாதையால் நடுங்க சில்பி கண்ணால் அவரை படம் பிடித்து மனதில் இருத்திக் கொண்டார்.

”ஸ்ரீநிவாஸா, நீ பல ஜென்மங்களில் ஈஸ்வரனை பூஜித்தவன். சிறந்த ஸ்தபதியாக சில்பியாக பல கோவில்களை, மூர்த்திகளை கல்லில் வடித்தவன். சாதாரண கல்லை தெய்வீகம் பொருந்திய தெய்வங்களாக மாற்றிய புண்யசாலி. இதுதான் உனக்கு கடைசி ஜென்மம். இனி பிறவி கிடையாது தெரியுமோ உனக்கு? இனிமே தெய்வங்களைத் தவிர வேறே எதையும் படம் எழுத மாட்டேன் என்று விரதமாக வைத்துக்கொள். நீ சில்ப சாஸ்திரம், சிலா சாஸ்திரம், ஆகமம், எல்லாம் தெரிந்தவன். புதுசா ஒண்ணும் தெரிஞ்சுக்கவேண்டாம். நாளைக்காலை சூரியன் உதயம் ஆனதிலிருந்து முழு மூச்சா ஒவ்வொரு வீட்டிலேயும். பகவானை, கோவில்களை, காகிதத்தில் கொண்டு சேர்க்கிற வேலை உனக்கு. நீ வரையும் ஆலயங்கள், மூர்த்திகள் சித்திரம் தத்ரூபமாக இருக்கு. நீ நன்னா இருப்பே !”

மகா பெரியவா ஆசிர்வதித்தார். சில்பி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.

1953ல் மஹா பெரியவாளை காஞ்சிபுரத்தில் பார்த்தது முதல் அவர் முற்றிலும் மாறிவிட்டார். பெரியவாளுக்கு தெரியாதா யாராலே என்ன ஆகணும் என்று!

பெரியவாளை தனது இல்லத்துக்கு அழைத்து பாத பூஜை பண்ண சில்பிக்கு ஒரு ஆசை. சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம். பெரியவாளை வேண்டிக்கொண்டே இருந்தவர்க்கு ”சரி அதுக்கென்ன அப்படியே ஆகட்டும்” என்று சிரித்து தலையசைத்தார் பெரியவா.

ஒரு நாள் அதிகாலையில் சாந்தோம் கடற்கரையில் சமுத்திர ஸ்நானம் செய்துவிட்டு, பெரியவா மைலாப்பூர் கச்சேரி ரோடில் நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென்று அருண்டேல் ரோடு திருப்பத்தில் நின்று, ‘இங்கேதானே ‘சில்பி’ வீடு எங்கியோ இருக்கிறது?’ என்று கேட்க அதை உறுதி செய்து கொள்ள, அந்தத் தெருவில் திரும்பி, ‘அவன் வீடு எங்கேயிருக்கு ? விசாரி ‘ என்று கூறவே, பரணீதரனும் மற்றவர்களும் ஒவ்வொரு வீடாக சென்று விசாரித்தனர் .
.
அதற்குள் பெரியவா ஒரு வீட்டுக்கு முன் வந்து நின்று ‘இதுவா பாரு ?’ என்றதும், உள்ளே சென்று விசாரித்ததில்
ஆம். அதுவேதான்! அப்போது ‘சில்பி’யின் குடும்பத்தினர் மட்டுமே வீட்டில் இருந்தனர். ‘சில்பி’ எங்கோ கோவில்களுக்கு படம் வரைய வெளியூர் சென்றிருந்தார்.

சில்பியின் வயதான அம்மாவுக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. பெரியவா நேரே பூஜையறைக்குச் சென்றார். பின்னர், கூடத்தில் வந்து அங்கு மாட்டியிருந்த படங்களை எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்து விட்டு புறப்பட்டார். அப்போது ‘சில்பி’யின் அம்மா, ‘எனக்கு ஆஸ்துமா தொந்தரவு அதிகமா இருக்கு. ரொம்பக் கஷ்டப்படறேன்’ என்று கூறினார்.

‘தினம் இரண்டு வில்வ தளம் சாப்பிட்டுண்டு வாங்கோ’ என்று பெரியவா வைத்தியம் சொன்னார்.

சில்பி ஊரிலிருந்து திரும்பியதும், ‘பெரியவா வீட்டுக்கு வந்த போது தாம் இல்லாமல் போய்விட்டோமே’ என்று மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார். பெரியவாளைத்தரிசித்தபோது,

”பெரியவா, இந்த சிறியேன் கிரகத்துக்கு வந்திருந்தீர்கள் என்று கேட்டு பரம சந்தோஷம் எனக்கு. ஆனால் எனக்கு பாக்யம் இல்லை நான் வீட்டிலே இல்லாம போய்ட்டேனே ”

அப்போது பெரியவா சிரித்துக் கொண்டே, ‘நீ ஆத்துக்கு வரணும், ஆத்துக்கு வரணும்’ னுதானேடா கூப்பிட்டுண்டிருந்தே. ”நான்” ஆத்திலே இருக்கறப்ப வாங்கன்னு கூப்பிட நீ இல்லையே ’ என்றார்.

Exit mobile version