Sage of Kanchi

Periyava Golden Quotes-1126

ஆஃப்கானிஸ்தான் மாதிரியான துருக்க ராஜ்யங்களில் கூடப் பல வருஷங்கள் முன்பே கோஹத்தியை ban செய்திருக்கிறார்கள். நம் தேசத்தில் பிரிட்டிஷ்காரர்கள் இதில் வேண்டுமென்றே மத த்வேஷங்களைத் தூண்டி விட்டிருந்தார்கள். எந்த ஸர்க்கார் இருந்தாலும், எந்தச் சட்டம் வந்தாலும், வராவிட்டாலும் பசுக்கள் கசாப்புக் கடைக்குப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் புனிதமான கடமை என்று நாம் இருந்தோமானால் கோமாதாவுக்கு ஹானி இல்லை. இதிலே நாம் குஜராத்தி, மார்வாரிகளைப் பார்த்து அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். கோபாலக்ருஷ்ணன் வாஸம் பண்ணின பிரதேசமானதால் போலிருக்கிறது இவர்களுக்கு கோ ரக்ஷணத்தில் அலாதிப்பற்று இருக்கிறது! – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Even in Muslim countries like Afghanistan, cow slaughter has been banned many years ago. However in our country, the British had wantonly kindled hatred and enmity among religions regarding this issue. Whatever be the ruling government and whether there is an enforcement of law or not, no harm will come to them, if only we make it a point that it is our sacred duty to save the cows from going to slaughter houses. Regarding this we have a lot more to learn from Gujarathis and Marvaris. It might be because their territory was the residence of Lord Gopalakrishnan once upon a time they possess a special interest in Ghorakshanam (Cow protection). – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal

Exit mobile version