Thanks to Sudarshan and professor for the photo and the context behind this! Aandiyum arasanum ondre for our acharyas.
Hara Hara Sankara Jaya Jaya Sankara!
சமீபத்தில் விழுப்புரம் வருகை தந்த காஞ்சி மடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மேல்பாதி கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை தொடக்கி வைத்து பசு மாடுகளுக்கு அகத்திக்கீரையினை வழங்கினார். பின்னர் அனைத்து விபரங்களையும் கேட்டறிந்து வாழ்த்திவிட்டு புறப்பட்டார். அப்போது அந்த ஊர் பெரியவர் ஒருவர் சைக்கிளில் வந்து, இவரைப் பார்த்ததும் கீழே இறங்கி நின்றார்.
அவரைப் பார்த்ததும் சுவாமிகள் அவரை நோக்கிச் சென்று,
உங்க பெயர் என்ன…
மண்ணாங்கட்டி என்றார்…….
திருமணமாகிவிட்டதா……
ஊம்..ஆயிடுச்சு….. ஒரு பையன் இருக்கான்…..என்றார்.
அவன் பெயர் என்ன….
சபரிநாதன் என்றார் அந்த பெரியவர். ….
ஏன் அந்த பெயர் வைத்தீர்கள் என சுவாமிகள் கேட்க,
நான் அப்ப சின்ன வயசு, அப்ப நான் எங்க ஊர்ல சபரிமலைக்கு மாலை போட்டுக்கிட்டு சென்றேன். பக்கத்து ஊர்லேர்ந்து குருசாமி மாலை போட்டார். அவருகூட மலைக்கு போய்வந்தேன். போய் வந்தபின் பிறந்த ஆண் குழந்தையா இருந்ததால சபரிநாதன்னு பெயர் வைத்தேன் என கூறினார் பெரியவர்.
உடனே அந்த பெரியவருக்கு ஆசி வழங்கி பழம் கொடுத்து விட்டு திரும்ப, கலாச்சாரம் பாதுகாப்பது என்பது இதுதான்…… தான் மாலை போட்டு மலைக்கு போய் வந்த பிறகு பிறந்த குழந்தைக்கு அந்த ஐயப்பனின் பெயரை வைத்துள்ளார் அந்த பெரியவர். அவர் தான் அந்த ஐயப்பனின் மகிமை. பழநி போய் வந்தால் முருகன் வைப்பார்கள், அதுபோல இவரும் செய்திருக்கிறார் என்றார் சுவாமிகள்.
அந்த கிராமத்து பெரியவரிடம் சுவாமிகள் பேசியது, அனைவருக்கும் பிடித்திருந்தது….. பிறகு அதே வழியில் தொடக்கப் பள்ளி மற்றும் உயர் நிலைப் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமானார். அப்போது அங்கு சற்று தொலைவில் பள்ளி தலைமையாசிரியர் இருந்தார். அவர் வருவதற்கு தாமதமானது. பின்னர் வாகனம் ஏறிய பின் அவர் வர, அவரிடம் மாணவர்களுக்காக காசி கயிறு-கையில் கட்டிக்கொள்வதற்கு- கற்கண்டு, குங்குமம் போன்றவைகளை தலைமையாசிரியரிடம் கொடுத்தார். அதனை அவர் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்து விடைப்பெற்றார்.
