Sage of Kanchi

குழந்தைகளின் ஆயுள் விருத்திக்கு என்ன செய்யணும்னு” மகாப் பெரியவர் சொன்னது

Thanks to Sri KV Jayashankar for FB share

காஞ்சி மகாப் பெரியவர் அணுக்கத் தொண்டர்களிடம் சம்பாஷிக்கும்போது பல அபூர்வத் தகவல்கள் வெளிவரும். அப்படி வெளிவந்தவைகளில் சில:;

லஷ்மியம்மா என்ற பெண்மணி பெரியவாளிடம் மகா பக்தியுள்ள பெண்மணி. அவருக்குப் புற்றுநோய். உடம்பு முடியவில்லை. இருப்பினும் பூஜைக்கு வேண்டிய பல பணிவிடைகளை சிரமத்துடன் செய்து கொண்டிருந்தார். அவருக்குப் பெரியவர் உபதேசம் செய்த ஸ்லோகம் ஒன்று அவரைப் புற்று நோயிலிருந்து காப்பாற்றியிருக்கிறது! அந்த ஸ்லோகம்:

அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ

(இந்த மந்திரத்தை 45 நாள்களுக்கு தினமும் 108 முறை பாராயணம் செய்து புற்றுநோயிலிருந்து முழுமையாக உறுதியாகக் குணமடையலாம் என்பது ஸ்ரீகாஞ்சி மகானின் வாக்கு).

எல்லோரும் அவசியம் தினமும் பஞ்சாங்கம் வாசிக்க வேண்டும் என்பது மகாப் பெரியவாளோட விருப்பம். அதனால் என்ன பயன் என்றும் சொல்லியிருக்கிறார்.

நங்கநல்லூர் வேதபுரி சாஸ்திரிகள் பெரியவா சொல்படி இன்றும் பஞ்சாங்கம் தினமும் வாசிப்பவர்.

குழந்தைகளின் ஆயுள் விருத்திக்கு என்ன செய்யணும்னு மகாப் பெரியவர் சொன்னது:

குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்க்கும்போது

“”அஸ்வத்தாமா பலிவ்யாச: ஹனுமானஞ்ச விபீஷணக்ருப பரசுராமஞ்ச சப்னததே சிரஞ்சீவிந:”

என்று சொல்லி தொடையில் ஏழு பொட்டு எண்ணெய் வைத்துத் தேய்க்க வேண்டும். குழந்தைகளின் ஜன்ம நஷத்திரத்திற்கு மாசாமாசம் ஆயுஷ்ய ஹோமம் பண்ணணும்.

Exit mobile version