Sage of Kanchi

Periyava Golden Quotes-1110


முன்னாளில் மாடுகளிடம் எத்தனை அபிமானம் காட்டி அதை ரக்ஷித்தார்கள் என்பதற்கு ஒரு சான்று சொல்கிறேன். மனிதர்களாகப் பிறந்தவர்கள் கடைத்தேறுவதற்காக செய்ய வேண்டிய தர்மங்களை எண்-நான்கு — அதாவது முப்பத்திரண்டு -– அறங்கள் என்று சொல்லியிருக்கிறது. அதை இரட்டிப்பாக்கி அறுபத்துநாலு தர்மங்கள் என்றும் சொல்வதுண்டு. அவற்றில் ஒன்றாக ‘ஆதீண்டு குற்றி நிறுவுதல்’ என்பதைச் சொல்லியிருக்கிறது. அது என்ன? ஒரு கோவுக்கு உடம்பிலே அரிக்கிறது. நமக்கு எங்கே அரித்தாலும் நாம் கையை வளைத்துச் சொறிந்து கொள்கிறோம். கோவோ பின்னங்காலைக் கொண்டுதான் சொறிந்து கொள்வது. அப்போது சில இடங்களில் அரித்தால் அதற்கு ஸரியாக சொறிந்து கொள்ள வராது. அந்த மாதிரி ஏற்படும்போது அது அரிப்பெடுக்கிற பாகத்தை நேரே வைத்துத் தேய்த்துச் சொறிந்து கொள்வதற்கு வாகாகக் கல்லை நட்டு வைப்பதுதான் ‘ஆதீண்டு குற்றி நிறுவுதல்’. ஆங்காங்கே இந்த மாதிரி நட்டு வைத்தார்கள். அந்த வழியில் போகிற மாடுகள் அவற்றில் சொறிந்து கொண்டு தினவு தீர்ந்தன. இப்படிச் சின்ன விஷயங்களைக்கூடப் பரம தர்மமாக நினைத்து கோவுக்குச் செய்த தேசத்தில் நாம் அதை எலும்பும் கூடுமாக்குகிறோம், வதையாவதற்கு விடுகிறோம் என்றால் அது நமக்குப் பெரிய அபக்யாதி. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

I’ll quote an example which stands as a proof to show how people in olden days showered affection on the cows and protected them. It’s been mentioned that there are thirty two Dharmas which all beings born as humans ought to perform. Sometimes these thirty two are doubled and considered as sixty four. One among them has been mentioned as “Aatheendu Kutri Nirivudhal”. What is it? Imagine a cow has an itching in some part of its body. When we have an itching somewhere in our body, we can bend and use our hands to scratch that part and get relieved of itching. But the cow can scratch itself only by its hind legs. When there is an itching in some part of the body which cannot be accessed by its rear legs, it wouldn’t be able to scratch itself. It is to install stones at various places in order to help the cow in such circumstances is what is called ‘Aatheendu Kutri Niruvudhal’, which the cow could rub its body against and get relief from itching. Such stones were installed for this purpose those days. The cows which were going that way scratched themselves on the stones and got relieved of their itching. Like this in a country which considered even small deeds as these as a great Dharma and performed them for the sake of the cows, we are letting the cows starve and go malnourished and are sending them to slaughter houses and what a huge disgrace it is on our part! – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal

Exit mobile version