
ஸந்நியாஸியுடைய ஆஹாரத்தில் இரண்டு அம்சங்கள். ஒன்று, அது அவனுக்கு ஸத்வ குணத்தை வளர்த்துக் கொடுக்க வேண்டும் என்பது. இன்னொன்று, அந்த ஆஹார வஸ்து ஏதொரு பிற ஜீவனுக்கும் ஹிம்ஸை விளைவிக்காமல் பெறப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது. கோக்ஷீரத்தில் இந்த இரண்டும் பூர்த்தி செய்யப்படுகின்றன. அது ஸத்வத்தைப் புகட்டுவதாக உள்ளது. அதை கோவிடமிருந்து க்ரஹிப்பதில் அந்த கோவுக்கு ஹிம்ஸையும் இல்லை. பகவத் ஸ்ருஷ்டியிலேயே அது விச்வப்ரேமைக்கு ஒரு இருப்பிடமாக உண்டாக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் mammal – கள் எனப்படுகிற பாலூட்டி ஜீவ ஜந்துக்களில் கோவுக்கு மட்டுமே தன்னுடைய கன்றுக்குத் தேவைப்படுகிற அளவுக்கு மாத்திரமின்றி, அந்த அளவுக்கு உபரியாக மற்ற மநுஷ்யர்களுக்கும் கொடுப்பதற்கு வசதியாக நிறையப் பால் சுரக்கிறது. ஒரு பசு கொடுக்கக்கூடிய அவ்வளவு பாலையும் அதன் கன்றே குடித்தால் அந்தக் கன்றுக்கு வயிறு முட்டி வாந்தி செய்ய ஆரம்பித்து விடும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
There are two aspects involved in the food of a Sanyasi. One is that it should develop his Sathva Guna to blossom and grow. The next is that the food product should’ve been obtained without bringing harm to any other being on earth. Both these aspects get fulfilled in cow’s milk. It remains as a food which inculcates Sathvam. While obtaining it from the cow, there is no harm meted out to the cow either. In God’s creation itself, it has been made as an abode of universal compassion. That is why among all the species of mammals, cow alone secretes more milk than what is necessary for its calf, thereby having an extra amount which facilitates feeding the humans also. If a calf gets to drink the entire amount of milk that the mother cow secretes, it would result in it being over fed and throwing up. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal