Sage of Kanchi

Short Q&A with Musiri Periyava – Sri Halasya Sundaram Iyer

முசிறி பெரியவாளிடம் நான் கேட்ட கேள்வியும், அவர் சொன்ன பதிலும்

1. இந்த வயசான காலத்தில எப்படி காசி வரைக்கும் போயிட்டு வந்தீங்க.

என்னோட பசங்க ரொம்ப ஆசைப்பட்டாங்க. என்னால சுத்தமா நடக்க முடியாது. நான் வரலை. இங்கேயே இருந்துக்கிறேன். நீங்க மட்டும் போயிட்டு வாங்கோன்னு சொன்னேன். அவன் கேட்கலை. எல்லோரும் சேர்ந்து தான் போகணும்னு சொன்னான். நிறைய பேர் உதவி பண்ணினாங்க. போயிட்டு வந்தாச்சு.

2. மஹாபெரியவாளை பற்றி சொல்லுங்கோ.

உடனே இரு கைகளையும் நமஸ்காரம் செய்து அவர் ஈஸ்வர ஸ்வரூபம். அவரை பற்றி வேற என்ன சொல்ல முடியும். இந்த ஒரு ஜென்மா போதாது அவரை பற்றி சொல்ல.

3. மஹாபெரியவா பெரும்பாலும் கனபாடிகள் என்றோ, பெயரை சொல்லியோ தான் அழைப்பார்ன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா குறிப்பிட்ட சிலரை மட்டும் ஊர்பெயரை சொல்லி பெரியவான்னு கூப்பிடறாரே. உங்களை முசிறி பெரியவான்னு கூப்பிடறார். அதே மாதிரி ஆங்கரை பெரியவா, முடிகொண்டான்பெரியவா, மன்னார்குடி பெரியவா இப்படி சிலருக்கு மட்டும் தான் இந்த பாக்கியம் கிடைச்சிருக்கு. இது பற்றி சொல்லுங்களேன்.

மஹாபெரியவா ஒரு ஞானி. அவருக்கு தெரியாத விஷயம்னு ஒன்னுமே கிடையாது. என்னை இப்படி அவர் கூப்பிடறதுக்கு நான் என்ன பாக்யம் பண்ணியிருக்கேன்னு தெரியலை.

4. ஸஹஸ்ர காயத்ரி பண்றதுக்கு எதாவது கால நிர்ணயம் இருக்கா? என்ன வழிமுறை

தினமும் பண்ணினா நல்லது. இல்லைனா வாரத்துக்கு ஒருமுறையாவது பண்றது நல்லது. சந்தியாவந்தனம் பண்ண்ட்டு அங்கந்யாஸம் கரந்யாஸம் பண்ணிட்டு அப்படியே காயத்ரி பண்ண வேண்டியது தான். பண்ணாம இருக்கக் கூடாது. ஆனா கண்டிப்பா காயத்ரி பண்ணியே ஆகணும்.

பின்குறிப்பு:

வயதான காரணத்தால் அவரால் நிறைய நேரம் பேச முடியலை. ரொம்ப சிரமப்படுதக்கூடாதுன்னு
மீதி சில விஷயங்கள் பேசிட்டு கிளம்பிட்டோம்.

Exit mobile version