Sage of Kanchi

Periyava Golden Quotes-886


சைவ போஜனமே பண்ண வேண்டிய ஜாதிக்காரன் அசைவ போஜனம் அநுமதிக்கப்பட்ட ஜாதியாருடன் சேர்ந்து சாப்பிட்டால் என்ன ஆகும்? அந்நிய பதார்த்தத்தில் இவனுக்கு ஒரு ஆசை உண்டானாலும் உண்டாகக் கூடுமல்லவா? நியமம் தப்ப இடமுண்டாகிவிடும் அல்லவா? ‘ஸம பங்க்தி’யினால் ஸமத்வம் கொண்டு வருவதாகச் சொல்லிக் கொண்டு, கிழங்கையும், பழத்தையும் தின்று கொண்டு கிடக்க வேண்டிய ஒரு ஸந்நியாசியை, முள்ளங்கி வெங்காய வாஸனை சபலப்படுத்துகிற பொதுப் பங்க்தியில் கொண்டு உட்கார்த்தி வைத்தால் அவனுடைய பெரிய லக்ஷ்யத்துக்கே அல்லவா ஹானி வந்துவிடும்? இம்மாதிரி ஒரு ஜாதிக்காரன், அல்லது ஆச்ரமக்காரனின் தர்மம் கெட்டுப் போவதால் பாதிக்கப்படுவது அவன் மட்டுமில்லை; இதனால் அவன் செய்கிற கார்யம் கெட்டு அவனால் ஸமூஹத்துக்கு கிடைக்கிற நன்மையே போய்விடுகிறது என்பதைச் சீர்திருத்தக்காரர்கள் கொஞ்சம் யோசிக்க வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

If a person of a particular caste who is prescribed only vegetarian food by the Sastras eats along with people who are permitted to eat non-vegetarian food – what will happen? Is it not possible that he gets tempted by the ‘other’ food? Is there not a chance that he will deviate from his discipline? Under the presumption of bringing about ‘equality’, if a Sanyasi who has to consume only roots and fruits is made to sit in a common pankthi where he is tempted with the smell of radish and onions, his entire ideal will be destroyed isn’t it? When a person belonging to a particular caste or ashrama (like sanyasa ashrama) wavers form his dharma, he alone is not affected. His mission is also affected and the welfare that the society would accrue from that mission is also lost. Reformists should ponder on this aspect. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

Exit mobile version