Sage of Kanchi

Periyava Golden Quotes-121

Periyava_Balaperiyava_Slider

வேதத்தில் காயத்ரீயைப் பற்றிச் சொல்லும் பொழுது, காயத்ரீம் சந்தஸாம் மாதா என்று இருக்கிறது. சந்தஸ் என்பது வேதம். வேத மந்திரங்களுக்கெல்லாம் தாயார் ஸ்தானம் காயத்ரீ என்று இங்கே வேதமே சொல்கிறது. 24 அக்ஷரம் கொண்ட காயத்ரீ மந்திரத்தில் ஒவ்வொன்றும் எட்டெழுத்துக் கொண்ட மூன்று பாதங்கள் இருக்கின்றன. அதனால் அதற்கு ‘த்ரிபதா’ காயத்ரீ என்றே ஒரு பெயர் இருக்கிறது. இந்த ஒவ்வொரு பாதமும் ஒவ்வொரு வேதத்தின் ஸாரம். அதாவது, ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்று வேதங்களையும் இறுக்கிப் பிழிந்து கொடுத்த essence (ஸாரம்) காயத்ரீ மஹாமந்திரம். அதர்வத்துக்குத் தனி காயத்ரீ இருக்கிறது. இரண்டாவது உபநயனம் செய்து கொண்டே அதை உபதேசம் பெற வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

While speaking about this mantra the Vedas use these words: “Gayathrim Chandasam Matha”. “Chandas” means the Vedas. So Gayathri is the mother of all Vedic mantras (that is the Vedas proclaim them so). It has twenty-four aksharas (letters or syllables) and three feet, each foot of eight syllables. That is why the mantra is called “Thripatha Gayathri”. Each foot is the essence of a Veda. Thus Gayathri is the essence of Rigveda, Yajurveda, and Samaveda. The Atharvaveda has its own Gayatri. To receive instruction in it you must have a second upanayana. – Pujya Sri Kanchi Maha Periyava

Exit mobile version