Thanks Hari for sharing! What a great thought that Brahmasri Sarma Sastrigal had and am sure Mahaperiyava will be very happy to see such efforts. We have read 100s of articles where Periyava talked about the sacrifices the parents and the children make in dedicating to vedam.
For non-Tamil readers – Sri Sarma Sastrigal is organizing an event to honor all parents of vidhyarthis in dedicating their children to veda matha. This event is going to happen in Chennai on March 13.
Hara Hara Sankara Jaya Jaya Sankara!

ஒரு முன்னோடி முயற்சி – வேத அத்யயனம் செய்வதற்காக தங்களது குழந்தைகளை பாடசாலைகளில் சேர்த்துள்ள பெற்றோர்களை கெளரவிக்கும் பிரஹ்மாண்டமான விழா – சென்னையில் – மார்ச் 13, 2016
கருமேகம் சூழ்ந்து காணப்படும் இன்றைய சூழ்நிலையில் இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த பெற்றோர்கள் சிலர், எந்தச் சலனமும் இன்றி, தங்களது அன்புக் குழந்தைகள் வேதம் பயின்று நமது தர்மத்தில் கூறப்பட்டுள்ளபடி கர்மங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்களை வேதபாடசாலைக்கு அனுப்பி உள்ளது உற்சாகத்தை அளிக்கிறது.
ஆம். தங்களது குழந்தைகள் பள்ளி, கல்லூரி படிப்புக்களை படித்து வாழ்க்கையில் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஒதுக்கி வைத்து விட்டு அவர்களை சிறு வயதிலேயே வேத பாடசாலைக்கு அனுப்பும் இளம் தம்பதிகள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த இளம் தந்தையர்கள் மற்றும் தாய்மார்கள் நமது வைதீகப் பாதையில் இருந்து நாம் முற்றிலும் விலகிச் சென்று விடக் கூடாது என்பதை உணர்ந்திருக்கிறார்கள். நமது தர்மத்தின் மீதுள்ள தங்களது ஈடுபாட்டை காட்டும் வகையில் அவர்கள் நேர்மறையான மற்றும் தைரியமான முடிவினை எடுத்துள்ளனர்.
’ஐ-பேட்’, ’4ஜி’, ’மேல்நாட்டில் படிப்பு/உத்யோகம்’ என எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், சிலர் தங்களது பிள்ளைகள் வேதம் கற்க வேண்டும் என்று சங்கல்பம் செய்துக்கொண்டு வேத பாடசாலைகளில் சேர்த்துள்ளது மகத்தான விஷயமல்லவா !.
தங்களது குழந்தைகளை வேத பாடசாலைகளில் சேர்த்து வேத அத்யயனம் செய்ய வைக்கும் இந்த அற்புதமான பெற்றோர்கள் நமது பாராட்டுக்கு உறியவர்கள்.
அவர்களுக்கு நமது சமுதாயம் கடைப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது. அவர்கள் வேதத்திற்கு ஆற்றியுள்ள இந்த மகத்தான கார்யத்திற்கு எவ்வளவு பாராட்டினலும் அது மிகவும் சொல்பமாகத்தான் இருக்கும். இந்த உயர்வான செயலை அவர்கள் எந்த ஆடம்பரமும் இன்றி அமைதியாக மேற்கொண்டுளளனர். இந்தப் பெற்றோர் அனைவருக்கும் நமது அனந்தகோடி நமஸ்காரங்களைத் தெரிவிக்கிறோம்.
அவர்களிடம் நமக்கு இருக்கும் விஸ்வாசத்தையும், அன்பையும், மரியாதையயும் காட்டுவதற்காக வருகின்ற மார்ச் மாதம் 13-ந் தேதி சென்னையில் ஒரு பிரஹ்மாண்டமான ஒரு பொது நிகழ்ச்சியின் மூலம் அவர்களை கெளரவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தங்கள் குழந்தைகளை வேத அத்யயனம் செய்ய வைத்துள்ள பெற்றோரை கௌரவிக்க வேண்டும் என்பது மட்டும் இந்த விழாவின் நோக்கமன்று. நமது வேதம் மற்றும் நமது தர்மத்திற்கு காட்டும் உயர்வான நோக்கமான மரியாதையும் ஆகும்.
ஸ்வாமி கடாக்ஷத்தினால் நடக்கவிருக்கும் இந்த விழா வெற்றி பெற நீங்கள் கீழ்கண்டவ்கையில் உதவலாம்:
* தங்கள் பிள்ளைகளை வேத பாடசாலையில் சேர்த்துள்ள பெற்றோர்களை அதிக அளவில் இதில் பங்கேற்கச் செய்யலாம்
* விழாவின் பட்ஜட் கிட்டத்தட்ட 6 லக்ஷத்திற்கு மேல்.
தங்களன்புள்ள
சர்மா சாஸ்திரிகள்