Sage of Kanchi

Pushpanjali Event for Mahaperiyava @Sankaralayam, Chetpet – August 23

ஸ்ரீ குருப்யோ நம:
மாதா நம்மை ஈன்றெடுத்தபின் பிதாவை நமக்கு அறிமுகப்படுத்துகிறாள். பிறகு நாம் வளர்ந்தபின் நமக்கு அறிவு புகட்ட நம்  பெற்றோர்   தகுந்த ஆசார்யனை தேடி அலைந்து தலைசிறந்த குருவை நமக்கு அறிமுகப்படுதுகிறார்கள். ஆச்சார்யர் நம்மை இந்த ஜகத்திற்கே தாய் தந்தையராகிய பார்வதி பரமேஸ்வராளிடம் அழைத்துச்செல்கிறார். அப்படிப்பட்ட தலைசிறந்த ஆசார்யர்களுள் ஆதி சங்கர பகவத்பாதாள் வழி வந்த காமகோடி பீடத்தை அலங்கரித்த நம் எல்லோராலும் அன்புடன் மஹா பெரியவாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாசுவாமிகள் அவர்களை நமக்கு அறிமுகபடுத்திய நம் பெற்றோர்களுக்கு முதற்கண் நன்றியையும் நமஸ்காரங்களையும் தெரிவித்துகொள்கிறோம்..

பூர்வ புண்ணியம் இருப்பர்களுக்கு மட்டுமே இப்படிப்பட்ட ஆசார்யனை அடையும் பாக்யம் கிடைக்கும். அப்படிப்பட்ட ஜகத்குருவுக்கு  புஷ்பாஞ்சலி. இது ஒரு புதுமை. ஏனெனில்  புஷ்பாஞ்சலி  பூஜை பெருமாள் பார்வதி பரமேஸ்வராளுக்கு மட்டும் தான் இதுவரை நடந்துள்ளது. மஹா பெரியவாள் பக்தர்கள் இணைந்து  ப்ரத்யக்ஷ பரப்ரஹ்மமான   பரமேஸ்வர ஸ்வரூபம் ஸ்ரீமஹாபெரியவாளுக்கு சென்னை முழுவதிலுமாக இருந்து 108 பக்தர்கள் ஒருசேர அமர்ந்து, அவரது சரணாரவிந்தங்களுக்கு அர்ச்சித்து, மிகச்சிறந்த முறையில் புஷ்பாஞ்சலி பூஜை வருகிற ஆகஸ்டு மாதம் 23-ம் தேதி அனுஷ நன்னாளில் சென்னையில் நடைபெற இருக்கிறது. இவ்வண்ணமாக ஸ்ரீமஹா பெரியவாளுக்கான புஷ்பாஞ்சலி  நடைபெறுவது என்பது இதுதான் முதல்முறை.

இந்த அறிய முயர்சியை  GREENER INDIA CHARITIES, ANNA NAGAR, CHENNAI 600 040 என்ற தன்னார்வு தொண்டு நிறுவனம் பொறுப்பேற்று நடத்துகின்றது. இந்த நிகழ்ச்சியின்  முன்னோட்டமாக ஒவ்வொரு மாதமும் வரும் அனுஷ நக்க்ஷதினன்று கடந்த ஆறு மாதங்களாக மஹாபெரியவாள் விக்ரஹதிற்கு அபிஷேக ஆராதனைகள் வீடு வீடாக சென்று நடத்தி வருகிறார்கள்.

இந்த புஷ்பாஞ்சலி உலக மக்களை குறிப்பாக இந்திய பிரஜைகளை இயற்கை சீற்றம் மற்றும் சர்வதேச தீவிரவாதம் இவற்றிலிருந்து காப்பாற்ற வேண்டி நடத்தப்படுகின்றது.

வாருங்கள்! அனைவருமாக ஒருசேர நம்மாலான கைங்கர்யத்தினைச் செய்து, மஹோன்னதமான புஷ்பாஞ்சலியில் கலந்து கொண்டு குருவருள் பெறுவோம்.

புஷ்பாஞ்சலி நடக்கும் இடம்            :   சங்கராலயம் ,  மேயர் ராமநாதன் சாலை,  சேத்துப்பட்டு ,  சென்னை
நாள்                                             :   23 ஆகஸ்ட் 2015
நேரம்                                           :  காலை 6 மணி முதல்

குருவுண்டு பயமில்லை; குறையேதும் இனியில்லை!

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்

IMG-20150610-WA0011

Exit mobile version