Smt Lalitha Krishnamurthy, one of the major contributors in Dheivathin Kural spell-check project, has penned these wonderful lines! So many poets from this blog!!!!

நினைத்துகிட்டே இருக்க தோணுதே – பெரியவாளை
நினைத்துகிட்டே இருக்க தோணுதே.
விடிகாலை முழித்திடும் போது
கைகளை பார்த்திடும் போது
காலண்டர் படித்திடும் போது -பெரியவாளை
ஸ்நானம் செய்திடும் போது
ஆடை அணியும் போது
திலகம் வைக்கும் போது – பெரியவாளை
பூஜைக்கு அமரும் போது
விளக்கை ஏற்றிடும் போது
பூவால் அர்ச்சிக்கும் போது – பெரியவாளை
செடியில் பூ பறிக்கும் போது
காக்கைக்கு அன்னம் இடும் போது
பக்ஷிக்கு நீர் வைக்கும் போது – பெரியவாளை
உணவு சாப்பிடும் போது
ஸ்லோகம் ஜபிக்கும் போது
ஸ்ரீராமஜயம் எழுதும் போது – பெரியவாளை
வெளியில் கிளம்பிடும் போது
பிறரிடம் பேசிடும் போது
சந்தேகம் வரும் போது – பெரியவாளை
இரவு மன்னிப்பு கேட்கும் போது
கண் மூடி தூங்கிடும் போது
தூக்கத்தில் கனா காணும் போது – பெரியவாளை
திருப்பதி மலை ஏறிடும் போது
இராமேஸ்வரம் கடல் கடக்கும் போது
காமாக்ஷி கோவில் போகும் போது – பெரியவாளை
ஜய ஜய சங்கரா
ஹர ஹர சங்கரா