Sage of Kanchi

தண்டனிட்டோம் உன்னடியில் சங்கரா!

Another sixer from Sri BN Mama!!!! Thanks mama for sharing this….

Periyava_doing_japam

முற்றத்தில் அமர்ந்து
தவமிருக்கும் தெய்வமே !
பற்றற்று இருந்தாலும்
பக்தர்களைக் காப்போனே !

பாற்கடலில் பள்ளிகொண்ட
திருமாலும் நீயே !
பொற்பதம் தூக்கிய
நீல கண்டனும் நீயே !

காஞ்சியென்ற நாமம் கொண்ட
முக்தி தரும் தலத்திலே
காமகோடி பீடம் என்ற
புனிதமான கோயிலிலே
காமாக்ஷித் தாய் மடியில்
தவழ்ந்ததொரு புதல்வனே !

நாடெங்கும் கால் பதித்து
பக்தர்களை ஆட்கொண்டு
வீடு தேடிச் சென்றாங்கு
பூஜைதனை ஏற்றவனே !

குமரி முதல் காசி வரை
கால் நோவ நடந்து சென்று
பாமரரின் துக்கங்கள் துயரங்கள்
துடைத் தெறிந்த தூயோனே !

நேபாளத்தில் நடந்ததொரு
மீளாத் துயரமொன்று
தாளாது தாளாது
தாளாது இனியொன்று
வேண்டாம் ஐயனே
இனியொன்று வேண்டாம்
தண்டனிட்டோம் உன்னடியில்
காத்திடுவாய் சங்கரா !
ஜய ஜய சங்கர !
ஹர ஹர சங்கர !

நாராயணன் பாலா
30/04/2015.

(inspired by Sanu Puthiran’s poem –Thank you Sir !)

Exit mobile version