Mama drew first and wrote a poem inspired by the drawing! How does it matter to us – we get double sweet treat from mama….
Thank you for sharing such a wonderful drawing and poem with us….
தண்டத்தைக் கையில் தரித்து
எங்கு செல்கிறீர் எம் சுவாமி ?
அண்டத்தை உய்விக்கவோ எங்கும்
மங்களம் பொங்கிடவோ.
இரு கால்களால் நடை எடுத்து
நானிலம் வலம் வந்தீர்
இரு கைகளால் ஆசி கொடுத்து இம்
மானுடரை வாழ வைத்தீர்.
அன்னதானம் சிவனடியாரை
அருகில் அழைத்துக் கொண்டீர்
பிரதோஷம் மாமாவுக்குப்
பரமபதம் நல்கினீர்
ராவன்னா கணபதிக்கு சிவ
ராத்திரியில் மோக்ஷம் தந்து
அனைவரையும் ஆட்கொண்ட உம்
அன்புக் கரங்களால்
எம்மையும் ஆட்கொள்ள
என்று வருவீர் எம் கருணைத் தெய்வமே ?
