Non-Tamil readers – please wait for some volunteers for translation. Sanskrit version is provided down below…
Thanks Suresh for sharing this….

அதிலே ஸாக்ஷஅத் ஜகத் பரிபாலகனான மஹா விஷ்ணுவைப் பற்றி ரொம்பவும் உயர்ந்த கருத்துக்களும், மனஸை உருக்கும் பாவமும், வாய்க்கு அம்ருதமாக இருக்கிற வாக்கும் கொண்டதான ‘ஷட்பதீ ஸ்தோத்ரம்’ என்பது ஒன்று. சின்ன ஸ்தோத்ரம்தான். அதை நன்றாக மனஸில் வாங்கிக்கொண்டு விட்டால் நாம் ஆசார்யாளையும் தெரிந்துகொண்டுவிடலாம், மஹாவிஷ்ணுவையும் தெரிந்து கொண்டு விடலாம், நம்மையும் தெரிந்துகொண்டுவிடலாம். நம்மைத் தெரிந்துகொள்கிறபடி தெரிந்து கொள்வதுதான் அத்வைதம். அந்த உச்சாணி வரைக்கும் இந்த ஷட்பதீ நம்மை அழைத்துக்கொண்டு போய்விடும்.
ஶ்ரீ ஷட்பதீ ஸ்தோத்ரம்
அவினயமபனய விஷ்ணோ தமய மனச்சமய விஷயமிருகத்ருஷ்ணம்
பூததயாம் விஸ்தாரய தாரய ஸம்ஸார ஸாகரத: (1)
திவ்யதுநீமகரந்தே பரிமள பரிபோக ஸச்சிதானந்தே
ஶ்ரீபதிபதாரவிந்தே பவபயகேதச்சிதே வந்தே (2)
ஸத்யபி பேதாபகமே நாத தவாஹம் நமாமகீநஸ்த்வம
ஸமுத்ரோஹி தரங்க:க்வசன நதாரங்க: (3)
உத்ருத நக நகபிதநுஜ தநுஜகுலாமித்ர மித்ரசசித்ருஷ்டே
த்ருஷ்டே பவதி ப்ரபவதி நபவதி கிம் பவத்ரஸ்கார: (4)
மத்ஸ்யாதிபிப்ரவதாரைரவதாரவதா(அ)வதா ஸதாவஸுதாம்
பரமேச்வர பரிபால்யோ பவதா பவதாபீதோஹம் (5)
தாமோதர குண்மந்திர ஸுந்தரவதனாரவிந்தப்கோவிந்த
பவ ஜலதி மதனமந்தர பரமம் த்ரமபனயத்வம் மே (6)
நாராயண கருணமய சரண்ம் கரவாணிதாவகௌ சரணௌ
இதி ஷட்பதீமதீயே வதனஸரோஜே ஸாதாவஸது (7)
இதனைப் பாராயண்ம் செய்தால் பகவானிடத்தில் பக்தி, வைராக்யம், மோக்ஷம், ஞானம் உண்டாகி மனக்கவலையும் கிரஹதோஷமும் நீங்கும்.
பெரியவா கடாக்ஷம்.
षट्पदीस्तॊत्रम्
(श्री शंकराचार्यकृतम्)
अविनयमपनय विष्णॊ दमय मनः शमय विषयमृगतृष्णाम् ।
भूतदयां विस्तारय तारय संसार सागरतः ॥ १ ॥
दिव्यधुनीमकरन्दॆ परिमलपरिभॊगसच्चिदानन्दॆ ।
श्रीपतिपदारविन्दॆ भवभयखॆदच्छिदे वन्दे॥ २ ॥
सत्यपि भॆदापगमॆ नाथ तवाहं न मामकीनस्त्वम् ।
सामुद्रॊ हि तरंगः क्वचन समुद्रॊ न तारंगः ॥ ३ ॥
उद्धृतनग नगभिदनुज दनुजकुलामित्र मित्रशशिदृष्टॆ ।
दृष्टॆ भवति प्रभवति न भवति किं भवतिरस्कारः ॥ ४ ॥
मत्स्यादिभिरवतारैरवतारवताऽवता सदा वसुधाम् ।
परमेश्वर परिपाल्यॊ भवता भवतापभीतोऽहम् ॥ ५ ॥
दामॊदर गुणमन्दिर सुन्दरवदनारविन्द गॊविन्द ।
भवजलधिमथनमन्दर परमं दरमपनय त्वं मॆ ॥ ६ ॥
नारायण करुणामय शरणं करवाणि तावकौ चरणौ ।
इति षट्पदी मदीयॆ वदनसरॊजॆ सदा वसतु ॥ ७ ॥