This is a sensitive topic. I want ALL of you to remember that these are Periyava’s words. If you do not agree to Him, that is fine – read it and leave it. I don’t want you to show your emotions here in the comments.
வீட்டையும் கவனித்துக் கொண்டு வேலைக்கும் போகிறோம் என்றால் இரண்டிலுமே ‘டெடிகேஷன்’ குறைந்து போகும். இந்த மாதிரி இரட்டைப் பொறுப்பு எடுத்துக் கொண்டால் தாக்குப் பிடிக்க முடியாத ஸ்ட்ரெயின் ஆகி, ரொம்பவும் திணறி ச்ரமப்படும் படியாகும். டெடிகேஷன் குறைவாதால் அந்த இரண்டு வேலைகளுமே த்ருப்திகரமாக அமையாமல் கெட்டுப் போகும். ஆஃபீஸ் போவதற்காக அகத்துக் கார்யத்தை அரக்கப் பரக்க அரைகுறையாகச் செய்வது, அதே மாதிரி அகத்துக்குத் திரும்பவேண்டும் என்பதற்காக் ஆபீஸில் அவஸரக் கோலமாகப் பண்ணுவது என்றாகி இரண்டுக்கும் பழுது ஏற்படும். வேலைகளில் பழுது ஏற்படுவது ஒரு பக்கம் இருக்கட்டும். தப்பான ஆசையினால் இப்படிப்பட்ட பழுதை ஏற்படுத்துகிற ஸ்த்ரீக்கு அதனால் பாபமும் ஸம்பவிக்கும். பாபத்துக்குக் கூலியாகப் பல விதங்களில் கஷ்டம் வந்து சேரத்தானே செய்யும்?
வீட்டுப் பணிக்குக் குந்தகம் என்கிறதால் மட்டும்தான் பெண்களுக்கு உத்யோகம் வேண்டாம் என்று சொல்லவில்லை. வீட்டையும் நன்றாகக் கவனித்துக் கொண்டு , உத்யோகம் முறைப்படி பார்ப்பதற்கு முடிந்தாலும்கூட அது வேண்டாம்தான்.
ஏனென்றால் உத்யோகம் என்று ஏற்படுகிறபோது லோக வியவஹாரம் பலவற்றுக்கு ஈடு கொடுத்துத்தானாக வேண்டியிருக்கும். பல பேரிடை புழங்கிக் கொண்டு, பலவித forces -ஐ சமாளித்தாகத்தான் வேண்டியிருக்கும். இதை வெளியில் நன்றாகவே செய்ய முடிந்தாலுங்கூட, இதனால் உள்ளூர ஸ்த்ரீத்வம், பெண்மை என்கிறதற்கே ஆணிவேரான மென்மை அரிபட்டுப் போகத்தான் செய்யும். அந்த மென்மையின் பெருமை இன்றைய ஸ்த்ரீகளுக்குத் தெரியாவிட்டாலும், வாஸ்தவத்தில் அப்படி ஸ்த்ரீத்வத்தைத் காப்பாற்றிக் கொண்டிருக்கும்போது அடைகிற நிறைவான சாந்தியையும் ஆனந்தத்தையும் ஒருத்திக்கு எந்தப் பதவியும் ஸ்ம்பாத்யமும் தரவே தராது. தான் தானாக இருக்கிற இயற்கை நிலையின் பரிபூர்ண நிறைவு, தான் வேறே ஒன்று மாதிரி – ஸ்த்ரீயானவள் புருஷன் மாதிரி – இருக்கிற செயற்கை நிலையில் எப்படிக் கிடைக்க முடியும்?
உத்யோகத்துக்குப் போகாத பெண்களிலும் இந்த சாந்தியும் ஆனந்தமும் தெரியாதவர்கள்தான் நிறைய இருப்பார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அவர்களும் ஏதோ ஒரு தினுஸில் அந்த மென்மை நிறைவைப் பறிகொடுத்தவர்களாகவே இருப்பதை ஒப்புக் கொள்கிறேன். அதற்காக, அந்த நிறைவுக்கு நிச்சயமாக ஹானி செய்யும் என்று தெரிந்த ஒன்றில் இறங்குவதை எப்படி அநுமதிக்க முடியும்?
சுக ஜீவனத்துக்குப் பதில் ஆரோக்யக் குறைவு
பொருளாதாரத்தைக் காரணம் காட்டி ஸ்த்ரீகளும் வேலைக்குப் போவதாகச் சொல்வதையும் ஏற்க முடியாமல்தான் இருக்கிறது. ஸ்த்ரீ ஸ்ம்பாதிப்பதில் முக்கால்வாசிக்கு மேலே அந்த ஸ்ம்பாத்தியத்துக்காக அவள் ‘ஸம்பாதித்து’க் கொள்கிற அநேக அநாவச்யச் செலவுகளுக்குத்தான் போகிறது. ஸுக ஜீவனத்துக்கு வழி என்ற பெயரில் ஒரு ஜீவனுக்கு அவச்யமான உடலுழைப்பும் சுறுசுறுப்பும் இல்லாமல் சோம்பேறியாய் ஆவதற்கு உதவி பண்ணுகிற ஸாதனங்கள் – நூதன நூதனமான உபகரணங்கள் – தினந்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. உற்பத்தி பண்ணுபவர்கள், எவையெல்லாம் இல்லாமலே நாம் வாழ்க்கை நடத்த முடியுமோ அவற்றை யெல்லாம் ரொம்பவும் அவச்யமானவைபோல் ஏகமாக விளம்பரப்படுத்தி, கடைகளில் புதுப் புதுப் பண்டங்களைக் குவித்துக் கொண்டே போகிறார்கள். ஸ்த்ரீகள் உத்யோகம் பார்த்துக் கையில் பணம் துள்ளுகிறதுபோது என்ன ஆகிறதென்றால் இந்த அநாவச்யப் பண்டங்களை யெல்லாம் வாங்கி வைத்துக் கொள்ளத் தோன்றுகிறது.
பத்ரிகையிலே வேடிக்கையாகப் போட்டிருந்து – அரைக்கிறது, கரைக்கிறது முதலான கார்யங்கள் உடம்பால் உழைத்துப் பண்ணினால் அதுவே ஒரு ஸ்த்ரீக்கு யோகாஸனம் பண்ணுகிறதற்கு மேலே தேஹரோக்கயத்தைக் கொடுத்து விடும். அப்படிப் பண்ணாமல் இதற்கெல்லாம் இப்போது புதிசாக மிக்ஸி, க்ரைண்டர் மாதிரி உபகரணங்கள் வந்திருக்கிறவற்றை ஒரு ஸ்த்ரீவாங்குகிறாள். கையை, உடம்பை அசைத்து, தான் ஒன்றுமே பண்ணாமல் மெஷின்கள் மூலமே பண்ணிக் கொள்கிறாள். அதனால் ஸரிவர உடம்புக்கான எக்ஸர்ஸைஸ் இல்லாமல் போய், கோளாறுகள் வருகின்றன. ஆபீஸ் வேலையில் தேஹாப்யாஸம் இல்லையோன்னோ? இன்னம் சொல்லப் போனால், தேஹாரோக்யத்துக்கு ஹானியாகவே கூட அதில் அநேகம் வந்து சேரும். அப்படித்தான் இந்தப் பொம்மனாட்டிக்கும் ஆகிறது. டாக்டரிடம் போகிறாள். டாக்டர், ‘ஃபிஸியோதெரபி’ பண்ணுகிறார். அதில் அவளை என்ன பண்ணச் சொல்கிறாரென்றால்: அம்மியில் ஓட்டி ஓட்டி அரைக்கிற மாதிரி, கல்லுரலில் சுழற்றிச் சுழற்றிச் அரைக்கிற மாதிரியெல்லாந்தான். ஏதோ பந்து, கிந்தைக் கொடுத்து எக்ஸர்ஸைஸ் பண்ணவைக்கிறார்!
ஒழுங்காக அகத்துக் கார்யம் செய்யாததால் ஆரோக்ய ஹானி, மெஷின்கள் வாங்குகிற செலவு, அதைவிடப் பெரிசாக டாக்டர் செலவு, வீடு – ஆபீஸுக்கு நடுவே வைத்யத்துக்குப் போவதற்கு அவகாசம் ஏற்படுத்திக் கொள்வதன் டென்ஷன், அதனால் நரம்புக் கோளாறு, மனஸின் பாதிப்பு – இப்படி ஒரு அனர்த்த பரம்பரை!
பழைய காலத்துப் பொம்மனாட்டிகள் அகத்துக் கார்யங்களுக்கே அஞ்ச மாட்டார்கள். இழுத்துப் போட்டுக் கொண்டு எதையாவது செய்துகொண்டேயிருப்பார்கள். இடிப்பது, புடைப்பது, வடாம், அப்பளம் இடுவது என்று பண்ணிக் கொண்டேயிருப்பார்கள். குனிந்து, நிமிர்ந்து, கையைக் காலை ஆட்டி அவர்கள் அப்படிப் பண்ணியதுதான் அவர்களுக்கு நல்ல பசியை உண்டாக்கி, அதற்கேற்கச் சாப்பிட்டு உடம்பை நல்லாரோக்யத்தில் வைத்திருந்தது. இப்போது ஸ்த்ரீகள் மாத்திரையும் கையுமாக இருப்பதுபோல் அப்போது இல்லாமல் காப்பாற்றியது. பெண்கள் குனிந்து நிமிர்ந்து கோலம் போட்டு, எச்சில் இட்டு வந்ததே அவர்களை அன்றைக்கு CESAREANனிலிருந்து காப்பாற்றி ஸுக ப்ரஸவமாகப் பெறச் செய்தது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். இப்போது குனிந்து தரையில் எச்சில் இடுவதற்கு இல்லாமல் டேபிள் சாப்பாடு வந்துவிட்டது. அதோடு ஏகப்பட்ட அநாசாரம், அநாரோக்யம் வந்திருக்கிறது! சாப்பிடுகிற இடம், சமைக்கிற இடம், வாசலில் கோலம் போடுகிற இடம் ஆகிய எல்லாவற்றிலிருந்தும் இந்த ஃபாஷன் யுகத்தில் கோமயம் (சாணம்) ஓடியே போய்விட்டது. அதோடு மடியும் போய்விட்டது. Antipollution -க்கு ஈடில்லாத அருமருந்தும் போய்விட்டது. கோமயம் எப்பேர்ப்பட்ட கிருமி நாசினி என்று ரஷ்ய தேசத்து ஸயன்டிஸ்ட் கூடச் சொல்கிறான். நம்முடைய ஃபாஷன் யுகத்து ஸ்த்ரீகளுக்கு அது ஸரிப்பட்டு வரவில்லை.
டேபிள் சாப்பாடு கூட நம்முடைய தேசத்து ஆஹாரத்துக்கு எடுத்ததில்லை என்று வெள்ளைக்கார ‘டயடீஷியன்’ ஒருத்தனே சொல்லியிருக்கிறான்! ‘நாற்காலியில் உட்காரிந்து கொண்டு, காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு இந்தியர்கள் தங்கள் சாப்பாட்டை – குறிப்பாக, தக்ஷிண தேசத்துப் சாப்பாட்டை – சாப்பிடுவது ஜீர்ணத்துக்கு அவ்வளவு உகந்ததில்லை. அடி வயிற்றிலிருந்து மேலே சற்று ப்ரெஷர் கொடுக்கிற மாதிரி, காலை மடித்துக்கொண்டு உட்கார்ந்து சாப்பிட்டாலே அந்த தினுஸு ஆஹாரம் ஜெரிப்பதற்கு உதவியாயிருக்கும்’ என்று சொல்லியிருக்கிறான். புருஷர்கள் சப்பளாம் கொட்டிக் கொண்டு (சப்பணம் கூட்டிக்கொண்டு) உட்காருவதும், ஸ்த்ரீகள் ஒரு காலைத் தரை சேர மடித்து, இன்னொன்றைக் குத்திட்டு வைத்துக்கொள்வதுந்தான் நம் தேச ஆசாரம். குத்திட்ட காலைக் கையால் கட்டக் கூடாது. அது மூதேவி, கையைக் காலுக்கு உட்பக்கமாகவே வைத்திருக்க வேண்டும், அதுவே ஸ்ரீ..
