Site icon Sage of Kanchi

ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 7

YouTube Poster

ஶ்ரீகாமாக்ஷியம்மை விருத்தம் 7:

முத்து மூக்குத்தியும் ரத்தின பதக்கமும் மோகன மாலையழகும்

முத்து நிறைந்த மூங்கிலோ எனும்படியான நாஸியைக் கொண்டவள் ஶ்ரீபராஶக்தியான ஶ்ரீகாமாக்ஷி. அந்த மூக்கிலே விளங்கும் சுக்ரனை பழிக்கும்படியான மூக்குத்தியாலே அழகியவள். அஞ்ஞானத்தை அழிக்கும்படியான ஒளிபொருந்திய நாஸிகையைக் கொண்டவள் ஶ்ரீபராம்பாள்.

ஆத்மப்ரகாசத்தை ஸூசிப்பிப்பதற்காக ரத்னங்களால் ஒளிரும் மாலைகளையும் ஹாரங்களையும் தரிக்கிறாள் ஶ்ரீகாமாக்ஷி அன்னை. அம்பிகை ஸர்வாலங்கார பூஷிதையாக விளங்குவது அத்வைத ஸ்திதியைக் குறிப்பதற்கே. ஆபரணப் ப்ரகாசமே ஆத்ம ப்ரகாசம். அந்த ஆத்ம ஸ்வரூபமே ஶ்ரீலலிதையாகிற ஶ்ரீகாமாக்ஷி அன்னை.

முழுதும் வைடூரியம் புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலியழகும்

ஶ்ரீவித்யையின் பரமஸாரமான ஶ்ரீகல்பகுலார்ணவம் திவ்ய மங்கள ஸ்வரூபமான அம்பாளை வர்ணிக்கும் போது “ஸௌமாங்கல்ய மஹாஸூத்ர மாஹாத்ம்ய ஸ்திர ஶங்கராம்” என்கிறது. தன்னுடைய மாங்கல்ய ஸூத்ரத்தின் மஹிமையினாலே தன் பதியான ஶ்ரீபரமேச்வரரை அழிவில்லாமல் ஸ்திரமாய்ச் செய்தவள். அப்படிப்பட்ட ஸௌமாங்கல்ய மஹாஸூத்ரத்தை தரித்த கழுத்தினை உடையவள் ஶ்ரீகாமாக்ஷி பராபட்டாரிகை.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

Exit mobile version