Sage of Kanchi

நாளை கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஆராதனை

நாளை (10th Feb 2021) தை மாத கிருஷ்ண சதுர்தசி. ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் ஆராதனை தினம். நாம் எல்லோரும் ஸ்வாமிகளுக்கு ப்ரியமான நாராயணீயம், மூக பஞ்சசதீ, முகுந்த மாலை, ராமரக்ஷா ஸ்தோத்ரம், கோவிந்த தாமோதர ஸ்தோத்ரம், சிவானந்தலஹரீ போன்ற ஸ்லோத்ரங்களை நிறைய பாராயணம் செய்து, அஷ்டோத்தர நாமாவளியால் பூஜை செய்து அவருடைய அருளுக்கு பாத்திரமாவோம்.

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அஷ்டோத்தரம் Govinda Damodara Swamigal Ashtotharam

இம்முறை ஆராதனை அன்று பக்தர்கள் ஸ்வாமிகள் அதிஷ்டானத்தில் கூட வேண்டாம் என்று அதிஷ்டானம் ட்ரஸ்ட் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளார்கள். ஆர்யா சதகம் 52வது ஸ்லோகத்தில், “காஞ்சீபுரத்தில் காமாக்ஷி நித்ய வாசம் செய்கிறாள். ஆனால் என் மனத்தில் அல்லவோ ஆனந்தமாக இருக்கிறாள்” என்று மூக கவி சொல்வார். அது போல மேலே குறிப்பிட்ட ஸ்தோத்ரங்களையோ,

கோவிந்த கோவிந்த ஹரே முராரே

கோவிந்த கோவிந்த முகுந்த கிருஷ்ணா |

கோவிந்த கோவிந்த ரதாங்கபாணே

கோவிந்த தாமோதர மாதவேதி ||

போன்ற பகவானுடைய நாமங்களைச் சொன்னாலே அங்கே கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பிரஸன்னமாகி விடுவார்.

ஸ்வாமிகள் தன் பக்தர்களுக்கு பண்ணும் அனுக்ரஹம் பற்றி ஒரு உபன்யாசம் இங்கே -> ஸ்துதி சதகம் 21வது ஸ்லோகம் பொருளுரை – வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம்

Exit mobile version