
ஒரு மஹாளய பக்ஷ த்வாதசி அன்று போதேந்திர ஸ்வாமிகள், தன் அதிஷ்டான ஸ்தலத்தை ஸ்ரீசத்குரு ஸ்வாமிகளுக்கு வெளிப்படுத்தி, அந்த திதியிலேயே தன்னுடைய ஆராதனையை செய்து வருமாறு பணித்ததால், ஒவ்வொரு வருடமும் மஹாளய பக்ஷ த்வாதசி அன்று போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை கொண்டாடப் படுகிறது.
யஸ்ய ஸ்மரண மாத்ரேண நாம பக்தி: ப்ரஜாயதே |
தம்நமாமி யதிச்ரேஷ்ட்டம் போதேந்த்ரம் ஜகதாம் குரும் ||
[எவருடைய ஸ்மரண மாத்திரத்தில் நாமபக்தி உண்டாகிறதோ அந்த யதிஸ்ரேஷ்டரும், ஜகத்குருவுமான போதேந்திர ஸ்வாமிகளை வணங்குகிறேன்] என்று போற்றப்படும் அவரை வணங்குவோம்.
பகவன்நாம மஹிமையை பற்றிய மஹா பெரியவாளின் அருள்வாக்கும், அதற்கு ஸ்வாமிகள் அளித்த விளக்கமும் இந்த இணைப்பில் படிக்கலாம் -> பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம்