Sage of Kanchi

மனஸி மம காமகோடி விஹரது

இன்று ஆடிப் பவுர்ணமி. ஆறு மாதங்களுக்கு முன்னால் தைப் பௌர்ணமி அன்று இந்த வலைதளத்தில் எழுத ஆரம்பித்தேன். இன்று ஆவணி அவிட்டம் கூட. புதுப் பூணல் போட்டுக் கொண்டு, ரிஷிகளை பூஜை, ஹோமம், தர்ப்பணம் முதலியவற்றால் திருப்தி செய்து, வேத அத்யாயனத்தை துவங்கி, இன்றிலிருந்து நல்ல பிராமணனாக இருப்பேன் என்று சங்கல்பம் செய்து கொள்ளும் நாள். நல்ல பிராமணன் என்றால் என்ன? ரிஷிகள் சொன்ன ஜப தபங்களைச் செய்து விவேக, வைராக்கியத்தை வளர்த்துக் கொள்வது, தூய்மையில் உயர்வது என்று அர்த்தம்.

அதோடு கூட, தூய்மையில் உயர்ந்து, ஞானத்தோடு விளங்கிய பெரியவா, கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் போன்ற மகான்களைப் பற்றி பேசுவதும், கேட்பதும், உண்மையை சொல்ல வேண்டுமானால், ஜப தபங்கள் செய்வதைவிட பிடித்தமானதாக தான் இருக்கிறது இல்லையா! இவற்றின் மூலமாகவும் தூய்மை ஏற்படும் என்ற ஒரு நம்பிக்கையும் நமக்கு இருக்கிறது. ஸ்வாமிகளின் வாழ்க்கையில் நடந்த ஒரு ரசமான நிகழ்ச்சியை இன்று உங்களோடு பகிர்கிறேன் -> புரமதன புண்ய கோடீ

இவற்றை மீண்டும் மீண்டும் அசை போடுவதின் மூலமாக, காமாக்ஷி தேவியும், பெரியவா, ஸ்வாமிகள் போன்ற மகான்களும் நம் மனதில் என்றும் வசிக்க வேண்டும். அது மூலமாகவும் விவேக வைராக்கியம் பெற்று, தூய்மையில் உயரவேண்டும்  என்று வேண்டிக்கொள்வோம்.

Exit mobile version