
Saints recommend slokams to their devotees to come out of difficulties or to obtain boons. But they also want us to chant slokams daily as a duty. For this reason,they also associate slokams with our daily routine work and even happy occasions. This will cultivate the habit of doing bhakti as a duty. I will share some slokams from mooka pancha shathi to explain what I mean and later you can associate your own favourite slokams (using their meaning) to your favorite activities and occasions and extend this list.
மஹான்கள் தம் பக்தர்களுக்கு, ஏதேனும் கஷ்ட நிவர்த்திக்காகவோ அல்லது இஷ்ட பிராப்திக்காகவோ ஸ்லோகங்களைச் சொல்லித் தருவது வழக்கம். ஆனால் அவர்கள், நாம் இந்த ஸ்லோகங்களை நித்யம் கடமையாக படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால் நம் அன்றாட காரியங்களின் இடையிலேயேயும், நாம் கொண்டாடும் விசேஷங்களிலும் கூட ஸ்லோகங்களை சொல்ல வழிகாட்டுகிறார்கள். இப்படி செய்துகொண்டே வந்தால் பகவானை வழிபடுவது ஒரு கடமையாகி விடும். பக்தி வளரும்.
எனக்கு பிடித்த மூக பஞ்ச சதியிலிருந்து அப்படி சில ஸ்லோகங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இது போல நீங்களும் உங்களுடைய பிடித்தமான ஸ்லோகங்களை (அர்த்தத்தை வைத்து), உங்களுக்கு பிடித்தமான காரியங்களோடு இணைத்துவிட்டால், நாள்பட பகவானை வழிபடுவது ஒரு கடமையாக மாறி விடும்.
முருக பக்தர்கள் காலையில் எழுந்தவுடன்
‘காலையில் எழுந்து உன் நாமமே மொழிந்து
காதல் உமை மைந்த என ஓதிக்
காலமும் உணர்ந்து ஞான வெளி கண்கள்
காண அருள் என்று பெறுவேனோ’
என்ற திருப்புகழை ஓதுவார்கள். காமாக்ஷியின் கடாக்ஷம் என்ற சூரியன் என் மனத்தாமரையை மலரச் செய்யட்டும் என்ற இந்த ஸ்லோகத்தையும் சொல்லலாம். –> ஹ்ருத்பங்கஜம் மம விகாஸயது – கடாக்ஷ சதகம் 58வது ஸ்லோகம் பொருளுரை
ஸுமங்கலிகள் வகிட்டுப்பொட்டில் குங்குமம் இட்டுக் கொள்ளும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லலாம் –> காமாக்ஷி குங்குமம் – ஸ்துதி சதகம் 3வது ஸ்லோகம் பொருளுரை
தினமும் சமைக்க அரிசி எடுக்கும் போது
‘அன்னபூர்ணே ஸதாபூர்ணே, சங்கர ப்ராண வல்லபே |
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி ||
மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேஸ்வர: |
பாந்தவா: சிவபக்தாஸ்ச ஸ்வதேசோ புவனத்ரயம் ||
என்று சொல்வார்கள். அதோடு மஹாபெரியவா சொன்ன பிடி அரிசி திட்டத்துக்கு ஒரு பிடி அரிசியை பானையில் போடும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லலாம் –> ஹே காமாக்ஷி! அன்னபூரணியும் நீயே! – ஆர்யா சதகம் 89வது ஸ்லோகம் பொருளுரை
ஸ்வாமிகள் தன்னுடைய பக்தர்கள் வீடு கட்டி க்ருஹப்ரவேசம் செய்தால், அந்த க்ருஹத்தில் இந்த ஸ்லோகத்தை சொல்வார்கள் –> மங்களங்களைத் தரும் காமாக்ஷி மந்தஸ்மிதம் – மந்தஸ்மித சதகம் 33வது ஸ்லோகம் பொருளுரை