Thanks to Sri Ganapathisubramanian for this short but powerful description of Thenambakkam landscape today!
நமது ஸ்ரீமடத்தின் தேனம்பாக்கம் முகாமில் இன்று காலையில் ஆரம்பித்து ஏழு மணி நேரமாகத் தொடர்ந்து விமர்சையாக நடந்து கொண்டிருக்கிறது ஸ்ரீவ்யாஸபூஜை..
இதற்குப் பிறகு ஸ்ரீசந்த்ரமௌளீசருக்குப் பூஜை நிகழவுள்ளது..
நமது ஸ்ரீமடத்தின் பழமை மிக்க வைதிக ஆசார பூஜை மரபும், அழகும், எளிமையும் வேறெங்கும் காண முடியாதது..
நேரலையில் கண்ணுறும் நமக்கே தொடர்ந்து அமர்ந்திருக்கக் கூடவில்லை…
ஆசார்யாள் உருவம் தாங்கிய அன்னை காமாக்ஷியாக… சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை போல.. சற்றும் தளர்வின்றி ஆனந்தமாகப் பூஜைகளை நிகழ்த்தும் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ மஹாஸந்நிதானங்களின் இன்றைய ஸ்ரீவ்யாஸ பூஜா வைபவத்தைக் காணாத கண்ணென்ன கண்ணே…
