சில நட்சத்திரங்களும் கிழமைகளும் சேரும் போது, அந்த நாட்கள் அமிர்த சித்தி யோக தினங்கள் என்று சொல்லப்படுகின்றன. அப்படிப்பட்ட விசேஷமான புண்ணிய தினங்களில் தெய்வங்களை பூஜித்தால் மிகுந்த பலன் கிடைக்கும்.
மேலே உள்ள காணொளியில் நம் ஆச்சார்யாள், வரும் ஜூன் 16ம் தேதி அஸ்வினி நட்சத்திரமும், செவ்வாய் கிழமையும் சேரும் பெளமாஶ்வினி என்ற புண்ணிய காலத்தை பற்றி குறிப்பிட்டு, அந்த நாளில் பராசக்தியை பூஜை, மஞ்சள் குங்குமம் தானம் செய்வது, லலிதா சஹஸ்ரநாமம், துர்கா சந்திரகலா ஸ்துதி, சௌந்தர்யலஹரி போன்ற ஸ்தோத்திரங்களின் பாராயணம், நைவேத்யம் முதலியவற்றால் திருப்தி செய்து, இடர்களை போக்கிக் கொண்டு, சுகாதாரமும், பொருளாதாரமும் மேம்பட்டு, சந்தோஷ வாழ்க்கையை அடையலாம் என்று அருளி இருக்கிறார்கள்.
துர்கா சந்திரகலா ஸ்துதி ஒலிப்பதிவு; durga chandrakala stuthi audio mp3 -> http://valmikiramayanam.in/?p=4331
இந்த சார்வரி வருடத்தின் மற்ற அமிர்த சித்தி யோக நாட்களும், பூஜா சங்கல்பமும், துர்க்கா சந்திர கலா ஸ்துதியும், கீழே உள்ள அறிவிப்பில் தரப்பட்டுள்ளது.
இந்த சார்வரி வருடத்தின் மற்ற அமிர்த சித்தி யோக நாட்கள்
ஆச்சார்யாள் இதே செய்தியை தெலுங்கிலும் ஹிந்தியிலும் அளித்துள்ளார்கள்.


