Sage of Kanchi

PERIYAVA GOLDEN QUOTES-1000


Jaya Jaya Sankara Hara Hara Sankara – On this very auspicious Thai Pongal/Makara Sankranthi here is Sri Periyava’s 1000th Golden Quote. It is only due to his divine sankalpam and blessings we are able to keep this daily divine nectar going along with the translation. Like me, I’m sure all these quotes are making an impact on many of the devotees lives. Sri Periyava Thiruvadigale Charanam. Rama Rama

வயிற்றுக்காக வாயைத் திறக்காத உபவாஸ நாட்களில் பேச்சுக்காகவும் வாயைத் திறக்கப்படாது என்பதோடு இன்னொரு நியமத்தையும் சேர்த்துக் கொள்வதுண்டு. வாயைத் திறக்கக் கூடாத அந்த நாளில் கண்ணை மட்டும் மூடக்கூடாது என்று நியமம்! இராப்பூராவும் கண் விழித்துக் கொண்டு, பகவத் சிந்தனை, கதை, கீர்த்தனை, பாராயணம் இதுகளிலேயே செலவழிக்க வேண்டும். வாயை மூடுவதாலேயே இப்படிக் கண்ணை மூடாமலிருக்கிற தெம்பு மன ஈடுபாடு இரண்டும் உண்டாகும். (‘கண்ணை மூடக்கூடாது’ என்பது ‘தூங்கக் கூடாது’ என்ற அர்த்தத்தில். நாள் முழுதும் கண்ணைத் திறந்து கொண்டே இருக்கணும் என்ற அர்த்தத்தில் இல்லை), சிவராத்திரிக்கும் வைகுண்ட ஏகாதசிக்கும் ராக்கண் விழிப்பதை முக்யமாக வைத்துக் கொண்டிருக்கிறோம். விடிய விடிய ஸினிமா பார்த்து புண்யத்துக்கு (‘புண்யத்தை’ இல்லை) மூட்டை கட்டுவதாக வழக்கம் ஏற்பட்டிருக்கிறது! பிரதி ஏகாதசிக்குமே இந்த நியமம் சொல்வதுண்டு. ஏகாதசியில் செய்ய வேண்டியது “போஜன த்வயம்” இல்லை, “போஜன த்ரயம்”; அதாவது உபவாஸம், பஜனை என்ற இரண்டோடு ‘ஜாகரணம்’ என்று மூன்றாவதாக ராக்கண் முழிப்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுண்டு. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள்

On those days of fasting when we do not open the mouth for the purpose of eating, another rule also has to be followed. One should not close the eyes on those days. One should stay awake throughout the night spending the time on thinking, singing, and reading about Bhagawan. Because of the silence that is being observed, the strength and concentration to remain awake is also created. Keeping awake does not mean merely keeping one’s eyes open throughout the day. We stay awake during Sivarathri and Vaikunta Ekadasi. (A practice has developed by which one keeps awake in the nights on these days by watching films there by packing off the ‘Punnya’ to be earned.)  This rule of staying awake applies to every Ekadasi. One has to follow not ‘Bhojana Dvayam’ but ‘Bhojana Thrayam’ during Ekadasi.  That means along with Upavasam and Bhajans, one should also stay awake (‘Jaakaranam’) during the night. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal

Exit mobile version