Glad to share the details of the books written by Sri P.Swaminathan. Needless to say that he has written more books on Mahaperiyava than anything else…..All Periyava anugraham….

மகா பெரியவா சரணம்.
எழுத்தையும் பேச்சையும் பிரதானமாகக் கொண்டு வாழ்ந்து வருகிற அடியேன், ‘ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ்’ என்கிற நிறுவனத்தின் சொந்தக்காரனாகவும் இருக்கிறேன்.
அடியேன் பல இதழ்களில் எழுதிய – எழுதி வரும் ஆன்மிகக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகங்களாக ‘ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ்’ நிறுவனம் மூலம் வெளியிட்டு வருகிறேன்.
(நட்பு அடிப்படையில் நண்பர்கள் ஒரு சிலருக்கு சிறப்பு வெளியீடுகளையும் ‘ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரித்துக் கொடுத்துள்ளேன். தற்போது பல சிரமங்கள் கருதி ஏற்றுக் கொள்வதில்லை.)
‘ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ்’ மூலம் அடியேன் எழுதி வெளியிட்ட முதல் நூல்: ‘மகா பெரியவா – தொகுதி 1’.
இதைத் தொடர்ந்து மகா பெரியவா மகிமைகளைப் பற்றி அடுத்தடுத்து நூல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் வெளியான ‘மகா பெரியவா – தொகுதி 8’ நூல், ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் 25-வது படைப்பு என்பதை சந்தோஷத்தோடும் பெருமையோடும் சொல்லிக் கொள்கிறேன். எல்லாம் குருநாதரான மகா பெரியவா அருள் இன்றி வேறில்லை.
காகித விலை, அச்சு மை விலை, ஜி.எஸ்.டி. – இவை எல்லாம் பயமுறுத்தினாலும், விடாமல் புத்தகங்களை வெளியிட்டு வருகிறேன். காரணம், எனது வாழ்க்கை பத்திரிகையில்தான் துவங்கியது.
இந்தப் புத்தகங்களை வாங்கி, பலருக்கும் பரிசளிப்பதன் மூலம்தான் என்னைப் போன்ற புத்தக ஆசிரியர்களும், பதிப்பாளர்களும் பலன் பெற முடியும்.
தங்கள் குடும்பத்தில் நடக்கின்ற விழாக்கள், திருமணம் – சஷ்டியப்த பூர்த்தி – சதாபிஷேகம் – கிரஹப் பிரவேசம், நவராத்திரி போன்ற விழாக்களுக்கு அடியேனுடைய புத்தகங்களை மொத்தமாக வாங்கிப் பலருக்கும் பரிசளிக்கலாம்.
ஒரே தலைப்பில் குறைந்தபட்சம் 25 புத்தகங்கள் வாங்கினால், தள்ளுபடி தரலாம். அதைவிடக் குறைந்த எண்ணிக்கையிலான புத்தகங்களுக்குத் தள்ளுபடி தர இயலாது. காரணம் – இன்றைய புத்தகத் தயாரிப்புக்கு ஆகும் கூடுதல் செலவினங்கள்தான்!
சிறு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தீபாவளி, புத்தாண்டு என்று சிறப்பு தினங்களை ஒட்டி அடியேனுடைய புத்தகங்களைப் பரிசளிக்கலாம்.
புத்தக விலைப் பட்டியலையும் இணைத்துள்ளேன்.
மகா பெரியவா 8 தொகுதிகளும் சேர்த்து ரூ.1,200 (கூரியர் செலவு தனி.)
புத்தகம் வேண்டுபவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்