
இந்தப் படத்தைப் போடணும்னு நினைச்சவுடனே, எப்படி ‘compose’பண்றதுன்னு யோசிச்சேன். “பிரத்யட்ச தெய்வமா அவதரிச்சு சகல ஜீவராசிகளுக்கும் அனுக்ரஹம் பண்ணின மஹா பெரியவாளைத் தரிசனம் பண்ணிக்காம, வாழ்க்கையே வெறுமன போயிடுத்தே! நம்மைப் போல ஒரு துரதிருஷ்டம் பிடித்தவன் ஒருவரும் இல்லை….” அப்படீங்கற தாபம், எம் மனசில எப்பவும் நீறுபூத்த நெருப்பு போல கனன்று கொண்டிருக்கும்.
–“பெரியவா என் கனவில வந்தா…….”
–“பெரியவா காரைத் தானே ஓட்டி என்னைக் காப்பாத்தினா…..”
–“பெரியவா எனக்கு பிரசாதம் குடுத்தா!……”
இப்படிப் பல பேர் தம் தம் அனுபவங்களைக் கூறும்பொழுது, மனசின் தாபம் கூடிக்கொண்டே போகும்.
‘சரி! பெரியவா என் கனவில் வரலேன்னா பரவாயில்ல.. நான் அவரை எங்காத்துத் தோட்டத்துல ஓக்காத்தி வெச்சுடறேன்!’ என்று முடிவெடுத்து, தோட்டத்துல ஒரு பகுதியை போட்டோ எடுத்தேன். பெரிய தென்னை, அதன் வலப்புறத்தில் ஒரு சிறிய தென்னை, அடுத்து ஒரு வில்வச் செடி, சுற்றிலும் துளசிச் செடிகள். எல்லாம் உள்ளடங்கிய போட்டோ ஒன்று எடுத்து, பெரிய தென்னையின் அடியில் பெரியவாளை ஒக்காத்தி வெச்சுட்டேன்”
இப்படி வந்ததுதான் இந்த சித்திரம்.
“ஓம்! கருணாரஸ கல்லோல கடாக்ஷாய நமோ நம: | “
“ஓம் தரஹாஸ ஸ்புரத் திவ்ய முகாப்ஜாய நமோ நம: |”.
B.N
Fantastic narration mama. So what if He has not come in our dream, we will be in His smaranai all the time with His blessings! That pure bakthi is enough for