Sage of Kanchi

Sri Rama Navami Special-Periyava Raman!

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Enjoy this stunning sketch along with the beautiful poem on the auspicious Sri Rama Navami. Way to go Sowmya!!! Rama Rama


அவனிதனிலே பிறந்து

ஆருயிர் சீதையை மணந்து

இலக்கணமாய் வாழ்ந்து

ஈரேழ் உலகினையும் காத்து

உயரிய ராஜ்ஜியம் துறந்து

ஊழ்வினையால் சீதையைப் பிரிந்து

எண்டிசையில் தேடி அலைந்து

ஏண்மிகு அநுமானை சந்தித்து

ஐம்பூதங்களில் ஒன்றை கடந்து

ஒன்றலர் இராவணனை அழித்து

ஓகையுடன் நாடு திரும்பி திருமுடி புனைந்து

ஒளடதமான நாமத்தை தந்த

இராமனை போற்றி வணங்குவோம் !!!

 – சௌம்யா

Exit mobile version