Thanks to Sri Varagooran mama for the share …

பக்தருக்கு பரம சங்கடமாப்போச்சு. என்னடா இது ஆசார்யாகிட்டே இந்த இடத்தைப்பத்தி சொல்லி
அவரோட சம்மதத்தையும் வாங்கிண்டாச்சு. இப்போ தரமுடியாதுங்கறாளே. இவாளுக்கு என்ன ஆச்சு?
இதை ஆசார்யாகிட்டே எப்படிச் சொல்றது? ரொம்பவே குழம்பின அவர் என்ன ஆனாலும் சரி,
ஆசார்யாளை நேர்லயே போய்ப்பாத்து சொல்லிடுவோம்னு புறப்பட்டுட்டார்.
அவர் வந்த சமயத்துல ஆசார்யா,மெட்ராஸ் சான்ஸ்கிரீட் காலேஜ்ல முகாமிட்டிருந்தா. அங்கேயே வந்து தரிசனம் பண்ணிட்டு விஷயத்தைச் சொன்னார் கொல்கத்தா பக்தர்.
ஒரு நிமிஷம் கண்ணை மூடிண்டு ஏதோ யோசனைல ஆழ்ந்த பரமாசார்யா,அந்த பக்தரைப் பார்த்து,
“சரி, எல்லாம் நல்லபடியா முடியும். நீ உடனே புறப்பட்டு கொல்கத்தா போ.நாளைக்கு கார்த்தால அவாகிட்டேபோய் திரும்பவும் இடம் கேளு” அப்படின்னு சொல்லி ஆசிர்வாதம் பண்ணி குங்கும பிரசாதம் குடுத்து அனுப்பினார்.
நாளைக்கு கார்த்தாலேயே கொல்கத்தாவுல இருக்கணும்னா, உடனடியாக ப்ளைட்ல போனாதான் உண்டு. என்ன செய்யறதுன்னு யோசித்தார் பக்தர். ஏன்னா இன்னிக்கு மாதிரி அன்னிக்கு விமானத்துலயெல்லாம் அவ்வளவு சீக்கிரம் இடம் கிடைக்காது.அதோட கட்டணம் பெரிய பெரிய பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியமா இருந்தது.
பக்தர் யோசிச்சுண்டே இருக்கறச்சேயே பெரியவாளைப் பார்க்க ஒருத்தர் வந்தார். “பெரியவா,காளிபூஜை பார்க்கறதுக்காக கொல்கத்தாவுக்கு போகலாம்னு இருக்கேன்.பெரியவா உத்தரவு தரணும்”னு கேட்டார்.
“அதுக்கென்ன பேஷா போயிட்டுவா” சொன்ன ஆசார்யா, “ஆமாம், நீ கொல்கத்தாவுக்கு எதுல போறே”
அப்படின்னு கேட்டார்.
“பெரியவா, ப்ளைட்லதான் போலாம்னு இருக்கேன்.என்னோட ப்ரெண்டும் வரேன்னார்னு ரெண்டு டிக்கெட் புக் பண்ணினேன், இப்போ அவர் வரமுடியாதுன்னுட்டார். வேற யாராவது வராளான்னு கேட்டு கூட்டிண்டு புறப்படணும் அவ்வளவுதான்!” சொன்னார் அவர்.
“ஒனக்கு ஆட்சேபனை இல்லைன்னா இவரைக் கூட்டிண்டு போயேன்!” பரமாசார்யா சொல்ல, அப்புறம் என்ன, உடனடியா புறப்பட்டா இரண்டுபேரும்.
ஆசார்யா சொன்னமாதிரியே மறுநாள் விடியக்கார்த்தால கொல்கத்தாவுல அந்த இடத்துக்கு சொந்தக்காரனைப்பா ர்க்கப்போனார் பக்தர்.
அவர் வரவுக்காகவே காத்துண்டு இருந்தமாதிரி, “வாங்கோ,வாங்கோ.நீங்க வரணுமேன்னு நினைச்சுண்டே
இருந்தோம். நேத்து ராத்திரி எங்க கனவுல எங்க குலதெய்வமான காளிதேவி வந்தா. வேதபாடசாலைக்கு
இடத்தைக் குடுத்துடுன்னு உத்தரவு போட்டா. அவ சொன்னதுக்கு அப்புறம் எங்களால மீறவே முடியாது.
இடத்தை நீங்களே வாங்கி வேதபாடசாலை கட்டிக்குங்கோ!” அப்படின்னு பரிபூரண சம்மதத்தோட அன்னிக்கே இடத்தைப் பேர்மாத்தி பதிவு பண்ணிக் குடுத்துட்டா.
திரும்பவும் ஆசார்யாளைப் பார்க்க வந்தார் பக்தர். அவர் எதுவும் சொல்றதுக்கு முன்னால,
“என்ன கனவுல வந்து இடத்தைக் குடுக்கச் சொல்லிட்டாளாமா? ரொம்ப சந்தோஷம்.வேதபாடசாலையைக் கட்டி குழந்தைகளுக்கு எல்லாத்தையும் நன்னா சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செஞ்சுடு!” ஆசீர்வாதம் பண்ணி பிரசாதமா கொஞ்சம் பழத்தை குடுத்து அனுப்பினார், பரமாசார்யா.
முதல்தடவை கொல்கத்தா பக்தர் வந்த அன்னிக்கு ராத்திரியே இடத்தோட சொந்தக்காரா கனவுல காளிதேவி வரப்போறா, இடத்தை தரச்சொல்லப்போறாங்கறதெல்லாம் ஆசார்யாளுக்கு முன்கூட்டியே எப்படித் தெரிஞ்சுது? கொல்கத்தாவுக்கு ப்ளைட் டிக்கெட்டோட ஒருத்தர் எப்படி சரியா அந்த நேரத்துக்கு வந்தார்?
இந்தக் கேள்விக்கெல்லாம் விடை பரமாசார்யாளுக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம்!
After posting these, I found one more article similar to this. These may be the same incident with different variation or may be two different incidents – I couldn’t tell…
Click here to read the other article