Thanks to Smt Saraswathi Thyagarajan Mami for the share…

பெரியவா சுருட்டப்பள்ளியில் முகாம்.இரண்டு ஜோடி மரப்பாதுகைகள் எடுத்துச் சென்றிருந்தேன். நான் பூஜை செய்ய ஒரு ஜோடி அநுங்க்ரஹிக்க வேண்டும் என்ற ப்ரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் என்பது என் உள் மனசு ஆவல்.
பெரியவாளிடம் பாதுகைகளை சமர்ப்பித்தேன்.
‘என் பூஜைக்கு ஒரு ஜோடி அனுக்ரஹிக்க வேண்டும்’ பெரியவாள் இரண்டு ஜோடியையுமே தன்னிடத்தில்
நகர்த்தி வைத்துக் கொண்டார்! ‘நான் அனேக ஊர்களுக்குக் கால் நடையாகவே போறேன்; இரண்டு ஜோடியுமே எனக்குத் தேவைப்படும்! என்னை மனசால் நெனைச்சுக்கோ அதுபோதும்’ என்று சொல்லிவிட்டார்!
பெரியவாளுக்குப் பயன்படும் விதமாக இரண்டு ஜோடியாகக் கொண்டுவந்தோமே நல்ல காலந்தான்.என்று சந்தோஷப்பட்டேன்.
1950ல் என் தகப்பனாருக்கு பெரியவா அனுக்ரஹம் செய்த பாதுகைகள் இருந்தன. என் தகப்பனார் சிவலோக ப்ராப்தி அடைந்தவுடன் யாருக்கு அந்தப் பாதுகை என திருவுளச் சீட்டுப் போட்டுப் பார்த்ததில் என் பெயருக்கே வந்தது. அது சாக்ஷாத் பரமேச்வரனான பெரியவா திருவுள்ளமாச்சே!
பகிர்ந்தவர் டி.சுப்ரமணியன் சென்னை 93