Thanks to Smt Uma. This is a repeat post – but still a great one to read….

சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகள் அப்போது காஞ்சிபுரத்தில் இருந்தார்:
ஒரு முறை வாரியார் அவரை தரிசிக்க சென்ற போது, மஹாஸ்வாமிகள் பூஜையில் இருந்ததால் . பூஜை முடிவதற்குள் காமாட்சியம்மனையும் , மற்ற கோயில்களையும் தரிசித்து விட்டு வரலாமென்று கிளம்பினார் வாரியார் !
தரிசனம் முடிந்து திரும்பி வரும் வழியில் சேங்காலிபுரம் அனந்தராமதீட்ஷதரை சந்தித்தார் வாரியார் ….
இருவரும் கோயிலின் ஒரு பக்கமாய் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது …
..சுமார் எண்பது வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கோல் ஊன்றியபடி மெதுவாக நடந்து தீஷதரை வணங்கி , “எனக்கு ஒரு ருத்ராட்ஷ மாலை கொடுங்களேன் !” என்றார் :
“என்னிடம் தற்போது ருத்ராத்ஷமாலை இல்லையே” என்றார் தீட்சதர்
உடனே அந்த மூதாட்டி , “அதனாலென்ன ?….காஞ்சி பெரியவரிடம் சொல்லி வாங்கி தாருங்கள் !”
என்றார்
“பெரியவாளிடம் என்ன சொல்லி ருத்ராத்ஷம் கேட்க வேண்டும் ?”
“மஹா பெரியவரை அவர் தாயார் பிரசவித்த காலத்தில் , கூட இருந்து ஒத்தாசை செய்த மருத்துவச்சி கேட்டதாக சொல்லுங்கள் !”
கூறிவிட்டு அந்த மூதாட்டி விடைபெற்று கிளம்ப…
வாரியாரும் , தீட்ஷதரும் மடத்தை அடைந்தனர் :
இரவு சுமார் ஒன்பது மணியளவில் வாரியாரும் , மஹா பெரியவரும் உரையாடிக்கொண்டிருக்க …
அப்போது அங்கே வந்தார் மடத்துசீடர் , அறையை சுத்தம் செய்யும் பொருட்டு அப்போது அங்கே ஒரு சால்வையும் , ஒரு ருத்ராட்ஷ மாலையும் இருந்தன. அந்த சீடரை அழைத்த மஹா சுவாமிகள் ,
“உடனே சேங்காலியை அழைத்து வா ! ( அனந்தராம தீஷதரை )” என்றார்
அடுத்தகணம் அங்கே வந்த தீஷதரிடம்,
“இந்த ருத்ராட்ஷ மாலையும் , சால்வையும் உனக்கு தான் !…..” என்று கூற …..தீஷதரோ மவ்னமாக இருந்தார் !
“நீ இவற்றை ( பெயரை சொல்லி ) அந்த கிழவியிடம் சேர்த்து விடு !…..இந்த சரீரத்தை அடையாளம் காட்டினாளே , …அவளுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் !” மஹா சுவாமிகள் கூற …..
சிலிர்த்து போனார்கள் வாரியாரும் , தீட்ஷதரும் !
கண்களில் நீர் மலக இருவரும் மஹா சுவாமிகளை நமஸ்கரித்தனர் !
பின்னர் , மடத்து பிரசாதங்களுடன் , ருத்ராட்ஷ மாலையையும் , சால்வையையும் சீடனிடம் கொடுத்து , தீட்சதர் மூலம் அந்த மூதாட்டியிடம் கொடுக்க செய்தார் மஹா சுவாமிகள் !!