சப்த த்வீபங்களிலும் வேதமே பரவியிருந்த காலத்தில் உலகம் முழுதும் பஸ்மதாரணம் செய்து கொண்டிருந்தார்கள். நாம் செய்த அபசாரங்களால் இன்றைக்கு இந்த தேசத்தை தவிர இதர தேசங்களில் மதாந்தரங்கள் வந்தவிட்டன. அதற்கு நாமே காரணம். நாம் மறுபடியும் நம்முடைய அனுஷ்டானங்களை எல்லாம் சரிவர மேற்கொள்ள வேண்டும். வைதீக மதம் முன் போலவே எல்லா இடங்களிலும் வரவேண்டும். இதற்கு நம்மிடத்தில் அனுஷ்டானம் வரவேண்டும். பஸ்மதாரணம் அவசியம். பஸ்மம் சிவஸ்வரூபம். கலியுகத்தில் எல்லாவிதமான பாபங்களையும் போக்குவதற்கு பஸ்மதாரணம், ருத்ராக்ஷதாரணம், சுத்த ஸ்படிக ஸ்வரூபத்யானம், வில்வ அர்ச்சனை இவை மிக அவசியம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
People all over Saptha Dweepa and all over the world wore Vibuthi during the times when Vedic religion was followed all over the world. Other religions have come in all other countries except for ours due to our sins. We are the reason for it. We have to get back to doing our Anushtanas properly. Vedic religion should come back in all places like before. For this to happen, we need to do our Anushtanams. Wearing Vibuthi is important. Basma (Vibuthi) is Siva Swaroopam. To get rid of all the sins of Kali Yuga, wearing Vibuthi, Rudraksha, Clean Spatika Swaroopa Dhyana, Bilva Archana are very important. – Sri Kanchi Maha Periyava.

