Dear Sri Swaminathan,
I am delighted to know that Sep 12th marks the successful completion of 3 years in the world of Mahaperiyava upanyasams. Everyone has a unique style of writing and talking etc. With your style, you have touched several hearts; reached several places and created a great impact and triggered Periyava bakthi among many. All these are not possible without His blessings – “Avan arulaale avan thaal vanangi”. May Periyava give you so many more years in continuing this great journey of talking about Mahaperiyava Mahatmiyam.
On behalf of the blog, we wish you all the bests!
Hara Hara Sankara Jaya Jaya Sankara!
அன்புடையீர்,
நமஸ்காரம்.
என் குலதெய்வம் ஸ்ரீமதுரகாளி அம்மன் ஆசியாலும், நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவா அருளாலும் ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்றத் துவங்கி மூன்று வருடம் பூர்த்தி ஆகிறது. அதாவது, நான்காவது வருடம் துவங்கப் போகிறது.
2012-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி எனது முதல் ‘மகா பெரியவா மகிமை’ சொற்பொழிவு அமுதசுரபி முன்னாள் ஆசிரியர் கலைமாமணி விக்கிரமன் அவர்களின் ஏற்பாட்டோடு துவங்கியது. ‘அமுதசுரபி’ அல்லவா? அன்றைக்குத் துவங்கியது நன்றாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த வருடம் (2015) செப்டம்பர் 12-ஆம் தேதி ஏதேனும் சொற்பொழிவு அமைந்தால் பெரியவா அருளாக இருக்குமே என்று எண்ணினேன். அதன்படி அயோத்யா மண்டப நிகழ்ச்சியே செப்டம்பர் 12-ஆம் தேதி அமைந்தது. உற்சாகமாக இருந்தேன்.
திடீரென அயோத்யா மண்டபத்தில் இருந்து அழைத்து, ‘விநாயகர் சதுர்த்தி வைபவத்துக்காக நிகழ்ச்சி நடத்துபவர்கள் செப்டம்பர் 12-ஐயும் கேட்கிறார்கள். எனவே, உங்களது நிகழ்ச்சியை முதல் நாள் – அதாவது செப்டம்பர் 11-ஆம் தேதி வைத்துக் கொள்ளலாமா?’ என்று கேட்டார்கள். ‘தாராளமாக’ என்று அவர்களுக்கு சம்மதம் தெரிவித்து விட்டேன்.
இருந்தாலும், ‘என்னடாது… செப்டம்பர் 12 நழுவிப் போயிற்றே’ என்று எண்ணினேன்.
என் அருமை நண்பர் வாசன் அவர்கள் (இந்து மகா ஜன சக்தி) இதே தேதியில் மேற்கு மாம்பலம் சங்கர மடத்தில் மகா பெரியவா பற்றிப் பேச முடியுமா என்று அழைப்பு விடுத்தார்.
சந்தோஷத்துடன் சம்மதித்தேன். எல்லாம் பெரியவா கிருபை.
எனது மூன்றாம் வருட சொற்பொழிவு பூர்த்தி தினமான வருகிற செப்டம்பர் 12 அன்று (நிறைந்த அமாவாசை – சனிக்கிழமை) சென்னை மேற்கு மாம்பலம் சங்கர மடத்தில் ‘மகா பெரியவா மகிமை’ சொற்பொழிவு. வெகு விமரிசையாக ஏற்பாடு செய்து வருகிறார் நண்பர் வாசன் அவர்கள்.
அன்றைக்கு அநேகமாக இன்னொரு ஆச்சரியமும் இருக்கிறது.
தீர்மானமானதும் தெரிவிக்கிறேனே… ப்ளீஸ்.
பெரியவா சரணம்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்
