Sage of Kanchi

பெரியவாளை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது – Lyrics

Thanks to Sri Varagooran Mama for the lyrics. I will soon write a special post about Sri Varagooran Narayanan mama for his selfless contribution to the world of Mahaperiyava.

Periyava_with_Balu_mama
பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பெரியவாளை
பார்த்துக்கிட்டே இருக்க தோணுது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

மங்கள நீராடிடும் போது மெதுவாய் மூங்கிலிலே எழுந்திடும் போது
மேலாடை போர்த்திடும் போது திருநீர் மேனி எல்லாம் பூசிடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

அனுஷ்டானம்   துவக்கிடும் போது அழகாய் ஆசமனம் புரிந்திடும் போது
அதிகாலை ஒரு மணி நேர ஜெபத்தில் ஆழ்ந்த அழகாய் அமர்ந்திடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

ஜபமுடிந்து நோக்கிடும் போது கண்ணால் ஜெயம் என்று நோக்கிடும் போது
ஜகமெல்லாம் மறைந்திடும் போது அந்த சன நேர பூரிப்பின் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

தண்டம் அதை ஏந்திடும் போது அழகாய் தளிர் நடை தான் போட்டிடும் போது
தொண்டர் படை உடன் வரும் போது நாமும் திரு வீதி வலம் வரும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

தரிசனம் தான் தர வரும் போது ஒவ்வோர் இடமாக நகர்ந்திடும் போது
தனியாக நடந்திடும் போது முன்னால் படி என்று  ஒலி வரும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

மேனாவில் அமர்ந்திடும் போது பின்னர் மரத்தடியில் இருந்திடும் போது
மேடை மேல் ஏறிடும் பொது வந்தொர் மனமெல்லாம் களித்திடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

மலராக குவித்துடும் போது பக்தர் கரம் சேர குவித்திடும் போது
மனமார ஏற்றிடும் போது மலரை சிரம் சேர போட்டிடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

பத்திரிக்கை படித்திடும் போது மூக்கு கண்ணாடி அணிந்திடும் போது
நான்கைந்து  மாற்றிடும் போது கூடை உள் எடுத்து வைத்திடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

லென்ஸ் எடுத்து படித்திடும் போது கையால் டார்ச் அடித்து படித்திடும் போது
புத்தகங்கள் படித்திடும் போது கீழே வைக்காமல் படித்திடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

பிரசாதம் பல வரும் போது திருநீறு குங்குமங்கள் இட்டிடும் போது
தேங்காயை தொட்டிடும் போது கொண்டு வந்தோர்க்கே திருப்பிடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

அருள் நமக்கு என்றிடும் போது கோயில் குடுமுழுக்கு என்று வரும் போது
அருள் மழையாய் பொழிந்திடும் போது பூர்ண பலம் குடுத்து மகிழ்ந்திடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

புறங்கையை கட்டிடும் போது அழகாய் ஒய்யார நடை இடும் போது
வேகமுடன் நடந்திடும் போது சீடர் ஓடி உடன் வழி செய்யும்  போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

பாலகுரு படித்திடும் போது அங்கே பாஷ்ய பாடம் நடந்திடும் போது
பெரும் குருவாய் அமர்ந்திடும் போது பரிவாய் தீக்ஷண்யம் வீற்றிடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

சர்ச்சைகள் நடந்திடும் போது தானும் சந்தேஹம் கேட்டிடும்  போது
விற்பன்னர் விளக்கிடும் போது தெளிவாய் விளக்கங்கள் தான் தரும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

மெதுவாக நடந்திடும் போது கமல பதமலரை கண்டிடும் போது
பதமாக நடை இடும் போது மனதும்  இதமாக  சுகம் பெரும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

மனை போட்டு அமர்ந்திடும் போது முறையாய் மாத்யானம் புரிந்திடும் போது
மென்கரத்தால் ஜபித்திடும் போது இமைகள் மூடி தவம் தான்  செய்திடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

புசித்தே பின் வந்திடும்  போது  கயிற்று கட்டில் மேல் அமர்ந்திடும் போது
கற்கண்டை மென்றிடும் போது ஏலம் லவங்கம் தான் சுவைத்திடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

மதியத்தில் காத்திடும் போது அயரும் நேரத்தும் அருளிடும் போது
மனமார சிரித்திடும் போது வந்தோர் மகிழ்வோடு விடை பெறும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

திருநீறு அணிந்திடும் போது மாலை அனுஷ்டானம் புரிந்திடும் போது
முக்காலம் முடித்திடும் போது இதையே எக்காலும் புரிந்திடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

இரவென்னும் வேளையின் போது பக்தர் நிறைகின்ற நேரத்தின் போது
இறக்கம் தான் ஏந்திடும் போது  இறையாய் எழுந்திட்டே அருள் செய்யும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

ஓய்வுக்கு அமர்ந்திடும் போது கயிற்று கட்டில் மேல் ஒய்ந்திடும் போது
ஓரிரு பேர் வந்திடும் போது அவரின் குசலம் தான் கேட்டிடும் போது  (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

விஸ்ராந்தி பொழுதெனும் போது தொண்டர் வினயதொடு இயம்பிடும் போது
குழந்தை போல் கேட்டிடும் போது அவர்கள் வேண்டலுக்கே இணங்கிடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

யாரும் தான் இல்லை எனும் போது மேனா கதவை தான் மூடிடும் போது
துயில் கொண்டார் இவர் எனும் போது நாமும் தாலாட்டு இசைத்திடும் போது (பெரியவாளை பார்த்துக்கிட்டே)

பெரியவாளை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது
பெரியவாளை பிரிந்து வர மனமும்  மறுக்குது

ஜெய ஜெய ஜெய சங்கரா ஹர ஹர ஹர சங்கரா சிவ சிவ சிவ

Exit mobile version