Sage of Kanchi

கனவில் உன்னுருவம் காணவேண்டும் நினைவில் உன் நாமம் சொல்லவேண்டும்!

From Sri BN Mama. Rest speaks for itself 🙂

Kanchi Periava - BN Painting

மூர்த்தி  உன்னைக்  கண்டதில்லை
தீர்த்தம்  உன்  கையால்  வாங்கவில்லை
நேர்த்திக்கடன்  செய்வதென்ன
வார்த்தை  ஒன்றால்  சொல்லிடுவாய் !

காஞ்சீபுரம்  செல்லவேண்டும்
அதிஷ்டானம்  காணவேண்டும்
பிரதக்ஷிணம்  பண்ணவேண்டும்
நமஸ்காரம்  செய்யவேண்டும்

தினமும்  அதையே  நினைக்கின்றேன்
மனத்தால்  உன்னை  ஸ்மரிக்கின்றேன்
கணமும்  உன்  நாமம்  நவில்கின்றேன்
எனக்கொரு  வழியைப்  பகன்றிடுவாய் !

‘பெரியவா  கனவில்  வந்தார்;
பெரியவா  என்னிடம்  பேசினார்
பெரியவா  எனக்கு  வில்வம்  தந்தார்
பெரியவா  கைப்பிடித்து  அழைத்துச்  சென்றார்’
பக்தர்  பலரும்  பகர்கின்றார்

என்  கனவில்  வருவாயோ
எனக்கொரு  வாக்கு  சொல்வாயோ
என்  கை  பிடித்து  அழைப்பாயோ
எனக்கொரு  வில்வம்  தருவாயோ ?

ஐந்தில்  வளையவில்லை
ஐம்பதில்  வளையுமோ ?
எம்பெருமான்  நீ  வழியொன்று  சொல்வாயே !
செம்பொன்  வண்ணத்துச்  செம்மலே  எந்தன்  குருவே !

கனவில்  உன்னுருவம்  காணவேண்டும்
நினைவில்  உன்  நாமம்  சொல்லவேண்டும்
எனையும்  நீயே  ஆட்கொள்ளவேண்டும்—வேறு
குறையொன்றுமில்லை  காமகோடி  சங்கரா!

நாராயணன்  பாலா.
29/04/15.

Exit mobile version