How true it was in those days? Thanks Karthi for this wonderful share….
ரா கணபதி அண்ணா சொல்வார்…
SPIRITUAL ISI ன்னு…பெரியவாளுக்கு அவர் வெச்ச பேர்.
ரா கணபதி பெரியவாளுக்கு வெச்ச பேர் SPIRITUAL ISI ஆம்.
எந்த ஒரு சாமானா இருந்தாலும் வெலை போகுமா, போகாதா, ஜெனுவின் ஆ, வாங்கலாமா, வேண்டாமா அப்டிங்கறதுக்கு என்ன பண்ணுவோம்?
ISI சீல் இருக்கா? ன்னு பாருங்கோ…அப்டிங்கறோம்.
இந்த ISI சீல் இருந்துடுத்து ன்னா இது ஜெனுவின், உபயோகமா இருக்கும். வாங்கிக்கலாம் அப்டிங்கறாப்பல…
இந்த ஸ்பிரிட்டுவல் லைன் ல, ஆன்மீகத்துல இருக்கறவா எல்லாரும் ‘இவர் நல்ல குருவா? நல்ல குருஜி யா? இது நல்ல ஆஸ்ரமமா?’ இப்படி ஏதான தெரிஞ்சுக்கணும் ன்னா என்ன?
பெரியவா என்ன சொல்றா அவர் பத்தி ன்னு பாரு அப்டிம்பாளாம்…
கணபதி சொல்றார்…
‘இப்படி எல்லோரும் என்கிட்டே கேட்டு இருக்கா. எத்தனையோ சுவாமிஜி இருக்கா…குருமார்கள் இருக்கா. அவாளோட ப்ரிய சிஷ்யாள் எல்லாம் இருக்கா. அவா எல்லாம் வந்து, ‘எங்க குருவை பத்தி பெரியவா என்ன சொல்லி இருக்கா?’ எங்க குருஜி ஆஸ்ரமத்தை பத்தி பெரியவா என்ன அபிப்ராயப் படறா?’ இப்படித் தான் கேட்டு இருக்காளே ஒழிய…பெரியவா பக்தர் ஒத்தர் ஆன, ‘அந்த குருஜி எங்க பெரியவாளை பத்தி என்ன சொல்லி இருக்கார்’ ன்னு இதுவரை கேக்கவே இல்லே.
ஏன்னா? அதுபத்தி ஒண்ணும் சொல்லவே வேண்டாம். ஓபன் சீக்ரட்.
அத்தனை பெரியவா ன்னா…முதல்ல எது இருந்ததோ இல்லியோ, பயம் இருந்தது. பக்தி இருந்ததோ இல்லியோ…தெரியாது. பெரியவா கிட்டே பக்தி இல்லாதவா கூட இருந்திருக்கா…இருக்கா… ஆனா பயம் இருக்கு. அதுவே போறும்.
பயம் இருக்கு…ஆனா பக்தி இல்லே…ஏன்? விதண்டை…ஈகோ…
இதுல இருந்தே தெரியறது. பெரியவாகிட்டே ஒரு சர்டிபிகேட் வாங்கிட்டா வெலை போயிடும். நம்பலாம்…அப்டின்னு ஒரு தைரியம்.
கணபதி இன்னும் விஸ்தாரமா சொல்வார்…
‘இவாளோ அங்கே போயி கால் ல விழுந்தாச்சு…குருன்னு வரிச்சாச்சு…அதுக்கப்புறம் பெரியவா சர்டிபிகேட் ஏன் எதிர்பாக்கறா? அவா பாட்டுக்கு போக வேண்டிது தானே?’
இடம் கொடுக்க மாட்டேங்கறது மனசு.
அதுதான் பெரியவாளோட அந்த பெருமை யை காண்பிக்கிறது.
அவரை நமஸ்காரம் பண்ணி, ஆஹா ஓஹோ ன்னு கொண்டாடித் தான் அவருக்கு பெருமை ன்னு இல்லே. இப்படி எல்லாமும் பெருமை.
நன்றி – ஸ்ரீ கணேச சர்மா அவர்களின் மஹா பெரியவா சப்தாஹம் பேருரையில்…
