Mr கணேசன் என்று ஒரு பெரியவா பக்தர். மஹா பெரியவா கொடுத்த பாணலிங்கத்தை அவரது பாக்டரியில் பிரதிஷ்டை செய்து ஒரு கோவில் கட்டியிருக்கிறார். திருவொற்றியூர் கோவிலில் இருந்து 400 வருட நந்தி, பிள்ளையார், முருகனுடன் வள்ளி, தெய்வானை சன்னதி உள்ளன.
கும்பாபிஷேகம், மண்டல பூஜை செய்துவிட்டார். பால பெரியவா கோவிலுக்கு வந்து பூஜை பண்ணியிருக்கார். இந்த சிவனுக்கு மகாலிங்கேஸ்வரர் என்று ஜெயேந்திர பெரியவா பெயர் சூட்டிஇருக்கா.
2 வாரம் முன்பு ஒரு interesting and அதிசய நிகழ்வு. ஒரு விடிகாலை 4 மணி அளவில் பாக்டரி மெயின் கேட் தட்டும் சத்தம் அந்த செக்யூரிட்டிக்கு கேட்டது. அவன் ஒரு சிறு வயது பையன். எழுந்து பார்த்தால் ஒரு வயதான சன்யாசி. பையன் கதவை திறந்து விட்டான். அவர் உள்ளே வந்து நேராக சிவன் சந்நிதிக்குள் சென்று பூஜை செய்தார். மலர் அர்ச்சனை செய்தார். பிறகு ‘இந்த கோவிலின் உரிமையாளர் யார்’ என்று கேட்டார். பையன் பதில் சொன்னவுடன் ‘குல தெய்வத்துக்கு காவடி எடுக்க சொல்லு. அது விட்டுப்போச்சு. காமாக்ஷி, மீனாக்ஷிக்கு அபிஷேகம் செய்ய சொல்லு’ என்று சொல்லிவிட்டு, விபூதி பிரசாதம் கொடுத்தார். (காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் எந்த சிவன் கோவிலுக்கும் அம்மன் சந்நிதி தனியாகக் கிடையாது). பையன் உள்ளே போய் பேப்பர் எடுத்து வருவதர்க்குள் அந்த சந்நியாசி போய்விட்டார். கேட் அருகில் தூங்கிக்கொண்டிருந்த இன்னொரு நேபாளி செக்யுரிடிக்கு இது எதுவும் தெரியாது.
இந்த சம்பவத்தை அவன் ஓனரிடம் சொன்னவுடன் ‘அவர் எப்படியிருந்தார்’ என்று கேட்டதற்கு அவன், பாக்டரி ஆபீஸ் வாசலில் வைத்திருக்கும் படத்தில் உள்ளவர்தான் வந்தார் என்று சொன்னான். அந்தப் படம் ‘பெரியவா படம்’ ! அந்த செக்யூரிட்டிக்கு பெரியவா பத்தி ஒன்றும் தெரியாது ! ஆனால் அவன் கடவுள் பக்தி உள்ளவன்.
அந்த சின்ன கோவிலுக்கு பெரியவா வந்திருக்கா. இது சத்தியம். என்ன ஒரு பாக்யவான் அந்த செக்யூரிட்டி, என்ன ஒரு பாக்யவான் அந்த owner Mr கணேசன். அந்த கோவிலுக்கு தீபாவளிக்கு முன்தினம் பிரதோஷம் அன்று செல்லும் பாக்கியம் எனக்கும் என் மனைவிக்கும் கிட்டியது. அங்கு சென்று ருத்ரம் சொல்லி அபிஷேகம் தரிசனம் செய்தோம்.
அந்த லிங்கத்துக்கு ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் அபிஷேகம் Mr LS வெங்கடேசன் செய்கிறார். அவரைப்பற்றி அறிய sage of kanchi site ல் (Mahaperiyava wordpress.com) வீடியோ கன்டென்ட் ல் அவரது interview பாருங்கள். சமீபத்தில் ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்தார்கள்.
இன்னொரு செய்தி. தமிழ் நாட்டில் தகுந்த இடங்களில் (கிராமங்களில்) சுமார் 200 கோவில்கள் கட்ட பிளான் இருக்கிறது. லண்டனை சேர்ந்த பக்தர் ஒருவர் 100 கோவில்கள் கட்ட உள்ளார். பால பெரியவா, Mr கணேசன் கட்டிய கோவில் மாதிரியே இருக்கவேண்டும். இதையே மடலாக வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.
படங்கள் அட்டச்மேண்டில் உள்ளன.
ஹர ஹர சங்கர. ஜெய ஜெய சங்கர.
Dr G Ravichandran.
Translation in English by Dr Ravi
==========================
Mr. Ganesan is a staunch devotee of Sri Sri Sri Maha Periyava. He has installed a ‘Bana Lingam’ given by Maha Periyava and constructed a temple in his factory premises 4 KM off Thiruneermalai, near Pallavaram. (Phone: 044 22631213, 9840202917). He has also installed a 400 year old Nandhi from Thiruvotriyur temple, Vinayagar and Muruga with Valli, Deivanai in this temple. He has done Kumbabishegam and Mandala Pooja also. Sri Bala Periyava has graced the occasion. Sri Jayendra Periyava has named this Lingam Mahalingeswarar.
An interesting and divine incident that happened a couple of weeks ago.
One fine early morning at around 4 am, an young man guarding the premises heard some one knocking the main gate. He saw a sanyasi (saint) standing there. He opened the gate. The Sanyasi came in and went straight into the temple and did pooja with flowers to the Bana Lingam, came out and gave Vibuthi prasadam to the lad. He asked him who the owner is. Then He said ‘ask him to do kavadi in his Kula Deivam temple which vow is pending. Ask him to do abishegam to Kamakshi and Meenakshi also’. ( there is no separate sannathi for Kamakshi in Siva temples in Kanchipuram). The boy went inside to bring a piece of paper to collect more Vibuthi and came out to know that the Sanyasi had gone. There was another Nepali guard who was sleeping and didn’t know anything about the incident.
When he narated this to his master Mr. Ganesan, who asked him how he looked. The boy said that it was the same person in the photo kept in front of the factory office. The photo was that of Maha Periyava! The boy doesn’t know anything about Maha Periyava but he is religious and spiritual.
There is no doubt that it was Maha Periyava who had come to the temple that day. How blessed is the boy and the owner Mr. Ganesan. My wife and I had the good fortune of visiting that temple on Pradosham, the day before Deepavali, chanting Rudram and seeing the Abishegam. Mr. L S Venkatesan, another great devotee of Maha Periyava has undertaken to do Abishegam to the Nandhi and Bana Lingam every Pradosham. To know more about him, you may visit mahaperiyavawordpress.com and see his interview in the video content. Annabishegam was done on Aippasi Pournami.
Another piece of information. There is a plan to build 200 small temples in suitable villages in Tamil Nadu. One person from London is going to build 100 of them. Sri Bala Periyava has asked him to take this temple as a model.
*****
Posted in Tamil and nicely translated to English by Dr Ravi in Sage of Kanchi group in Facebook https://www.facebook.com/groups/Periyavaa/
