Sage of Kanchi

அந்த பொட்டலத்தில் இருந்தது என்ன?


66th Acharya at Kanchi Mutt

 

 

67th  Acharya at Kanchi Mutt
கலவை அதிஷ்டானத்திலிருந்து பிரசாதம் கொண்டு வந்து தட்டில் வைத்து, பெரியவாள் எதிரில் கீழே வைக்க போனார், அதிஷ்டான பூஜகர் ராதா கிருஷ்ணன். பெரியவாள் கையை நீட்டி தானே வாங்கி கொண்டார். தட்டிலிருந்த வில்வ மாலையை தான் தலையில் வைத்து கொண்டார். விபூதி குங்குமம் இட்டு கொண்டார்.

பின்னரும், தட்டில் எதையோ தேடினார்கள். உடனே மன்னிப்பு கோரும் முகத்துடன் ஒரு இலை சருகு பொட்டலத்தை எடுத்து வைத்தார் ராதா கிருஷ்ணன். அந்த சருகு பொட்டலத்தில் இருந்ததை மிகவும் பக்தி சிரத்தையுடன் தன் தலையில் அணிந்து கொண்டார்கள் பெரியவாள்.

அந்த பொட்டலத்தில் இருந்தது என்ன?

கலவையிலுள்ள குரு, பரமகுரு பிருந்தாவன (துளசி செடி) மிருத்திகை (மண்). பெரியவாளுக்கு தன் குருமார்களிடம் அவ்வளவு பக்தி.

ஆமாம், நமக்கு படிப்பினை!

****
Thanks a ton to Shri “Well Bred” Kannan who had posted this in Sage of Kanchi Facebook group.

Exit mobile version