பெண்கள் வேதமந்திரங்களைச் சொல்லக்கூடாது என்று சிலர் தடுக்கிறார்களே…? பெண்களை அவமானப்படுத்தும் முயற்சி இல்லையா இது…?
பதில் சொல்கிறார் சுகி.சிவம்.
சம்ஸ்கிருதமோ,இந்து மதமோ பெண்களை விலக்கி வைக்கவில்லை. வேத காலத்திலேயே பெண் ரிஷிகள் இருந்திருக்கிறார்கள்.
பெண்கள் வேதம் ஓதுவதை சமூகம் ஏற்கவில்லை.காரணம்,வேதம் ஓதும்போது நாபியில் இருந்து ஒலி எழவேண்டும். நன்கு வாய் பிளந்து ஒலி-உச்சரிப்பு-தொனி குறையாது சொல்ல வேண்டும்.இப்படிச் செய்தால் குரல் மிக மிகக்
கனத்துவிடும். சிறந்த வேத விற்பன்னர்கள் பலர் அடித்தொண்டையில் இருந்து கனத்த குரலில் பேசுவதைக் கேட்டிருக்கலாம்.பெண்கள் குரல் அப்படிக் கனத்துப்
போனால், கேட்கச் சகிக்காது. அம்பிகை ம்ருது பாஷிணி என்கிறது லலிதா ஸகஸ்ரநாமம்.வேத அத்யயனம் செய்தால் பெண்களின் குரல் அழகு போய்விடும்.
நாபியில் இருந்து காற்றை எழுப்பி உச்சரிப்பதால் வயிறு பருத்துக்கொண்டே வரும்.கொடியிடை என்கிற பெருமை போய்விடும்.பூசணி வயிறு வாய்த்துவிடும். பெண்மையை, அழகை,மென்மையைக் காப்பது அவமானப்படுத்தும் முயற்சியா..?
