ஸ்ரீலலிதா மஹித்ரிபுரஸுந்தரி ஆவிர்பாவம் மாக பௌர்ணமி:
Shri Lalita Mahatripurasundari Avirbhava:
1) ஆதிசக்தியான ஸ்ரீலலிதா பரமேச்வரியை மஹாயாகக்ரமத்தால் மும்மூர்த்திகளும், ப்ருஹஸ்பதியும், ஸமஸ்த தேவர்களும் ஆராதித்தல்.
2) மஹாயாகக்ரம பூர்ணாஹூதி ஸமர்பித்த பின் பராசக்தியான ஜகன்மாதா, கோடிக்கணக்கான மின்னல் போன்ற காந்தியுடனும், பர்வதம் பிளந்தாற் போன்ற ஓசையுடனும், மஹாதேஜோ ரூபிணியாக ஆவிர்பவித்தல்.
3) த்ரிமூர்த்திகள் மற்றும் ப்ருஹஸ்பதியைத் தவிர ஸகல தேவர்களும் மயங்கி விழலும், ப்ருஹஸ்பதியும், மும்மூர்த்திகளும் ஸ்ரீலலிதேச்வரியை ஸ்துதித்தல்.
4) ஸ்ரீஸூக்த விதானத்தால், ஸ்ரீலலிதா பரமேச்வரியை வழிபடுமாறு, ப்ருஹஸ்பதி தேவர்களுக்கு உபதேசித்தல்.
5) ஸ்ரீலக்ஷ்மி தேவி தனக்குத் தாயாரான ஸ்ரீலலிதா மஹேச்வரியை ஸ்ரீஸூக்தத்தால் நூறு அற்புதங்கள் (பலகோடி வருஷங்கள்) க்ஷீராப்தியில் ஆராதித்தலும், ஸ்ரீத்ரிபுரஸுந்தரியான தேவி, லக்ஷ்மி தேவிக்கு அருளலும்.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷீ சரணம்
— மயிலாடுதுறை ராகவன்


