ஐப்பசி பூரம் ஸ்ரீகாமாக்ஷி, ஸ்ரீபங்காரு காமாக்ஷி ஆவிர்பாவம் விஷேஷ ப்ரவசனம்:
ஸ்ரீமூலகாமாக்ஷி, ஸ்ரீதபோ காமாக்ஷி, ஸ்ரீஹேமகாமாக்ஷி பஞ்சநாம விவரணம்:
1) ஸ்வயம்புவான ஸ்ரீசக்ர மஹாபிலத்தில் லீலையாய் ஆவிர்பவித்த ஸ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியான ஸ்ரீகாமாக்ஷீ தேவீ மஹிமை.
2) ப்ரஹ்ம தேவருக்கு அனுக்ரஹிக்க ஸ்ரீவித்யா மஹாத்ரிபுரஸுந்தரியான ஸ்ரீகாமாக்ஷீயின் மூன்றாவது நேரத்திலிருந்து ஸ்வர்ண ப்ரஹ்மாக்ருதியாய் தோன்றிய ஸுத்த சக்தி வடிவான ஸ்ரீபங்காரு காமாக்ஷி மஹிமை.
3) ஸ்வர்ணாங்கி, சுகஹஸ்தா, சூதலிங்கவல்லபா, காமாக்ஷீ மற்றும் தர்ம தேவீ ஆகியன பங்காரு காமாக்ஷியின் பஞ்ச நாமங்கள்.
4) தபஸ்வினி, கனச்யாமா, ஸர்வசைவாலயேச்வரி, காமாக்ஷீ, காளிகா ஆகியன தபோ காமாக்ஷியின் பஞ்ச நாமங்கள்.
5) த்ரிபுரா, ராஜராஜேச்வரி, மஹாகாமேச்வர வல்லபா, காமாக்ஷீ, காமகோடீ ஆகியன ஸ்ரீலலிதாம்பிகையான மூலகாமாக்ஷியின் பஞ்ச நாமங்கள்.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷீ சரணம்
— மயிலாடுதுறை ராகவன்


