Site icon Sage of Kanchi

காஞ்சிபுரம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் வஸந்தோத்ஸவத்தில் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் வைபவம் ப்ரவசனம்

காஞ்சிபுரம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் வஸந்தோத்ஸவம் விஷேஷ ப்ரவசனம் நாள் 2:

மூலாம்னாய ஸர்வஞ்ஞ காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் முன் ஸ்ரீபெரியவாள் ஆஞ்ஞைக்கு இணங்க அடியேனுடைய ப்ரவசனம் :

ஸ்ரீஸ்ரீவிஜயேந்த்ர பெரியவாள் இன்றைய தினம் (23 May) அன்று ஸ்ரீஸ்ரீகாமாக்ஷி பராம்பாளின் வைகாசி வஸந்தோத்ஸவத்தில் கலந்துகொண்டு, ஸ்ரீஅம்பாளுக்கு விஷேஷ பூஜைகளைச் செய்து, ஸ்ரீகாமாக்ஷி பரதேவதையின் வைபவத்தைப் பற்றி அதிவிஷேஷமாக அனுக்ரஹ பாஷணம் செய்தருளினார்கள்.

அதற்கு பின்பு, ஸ்ரீபெரியவாள் முன் ஸ்ரீகாமாக்ஷி பரதேவதை வைபவத்தைப் பற்றி ப்ரவசனம் செய்ய ஆஞ்ஞாபித்து அருளினார்கள். அதன் ப்ரகாரம் ஸ்ரீலலிதா பராம்பிகையான ஸ்ரீகாமாக்ஷி அம்பாளின் உத்ஸவ மூர்த்தி ப்ரகாசிக்க, ஸ்ரீபெரியவாள் வீற்றிருக்க அவர் முன் சிறு ப்ரவசனம் செய்யும்படியான ஒரு ஸௌபாக்யம் கிடைத்தது.

அனைத்தும் குருவருள், ஸ்ரீபராம்பிகையான காமாக்ஷி அனுக்ரஹம்.

ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஸ்தானிகர்களுக்கு நமஸ்காரமும் நன்றிகளும்

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

 

Exit mobile version