
ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் த்யானம் (காமாக்ஷி விலாஸம்)
1) காயத்ர்யோங்கார கோணே ஸா காமாக்ஷி வர்தததே ஸதா
ஆதிசக்தி ஸ்வயம் வ்யக்தா ஸர்வ விச்வஸ்ய காரணம்
“த்ரிபுரா காயத்ரி வடிவான ஓங்காரமான கோணத்தில் வீற்றிருப்பவளும், காமாக்ஷியும், ஆதிசக்தியும், ஸர்வ புவனங்களுக்கும் காரணமானவளும்!!”
2) பத்மாஸனே நிஷண்ணா ஸா காமபீட நிவாஸினி
சதுர்புஜா த்ரிநயனா மஹாத்ரிபுரஸுந்தரி
“பத்மாஸனத்தில் வீற்றிருப்பவளும், காமகோடி எனும் மஹாபீடத்தில் வஸிப்பவளும், நான்கு கரத்தினளும், மூன்று நயனத்தினளும், மஹாத்ரிபுரஸுந்தரியும்!!”
3) மூலசக்திர் ப்ரஹ்மவித்யா ஆதிலக்ஷ்மி இதிச்ருதா
ஆதிசக்திர் ஜகத்தாத்ரி ராஜீவஸத்ருசப்ரபா
“மூலமஹாசக்தியும், ப்ரஹ்மவித்யையும், ஆதிலக்ஷ்மியும், ஆதிசக்தியும், ஜகத்தினை தாங்குபவளும், தாமரை போன்ற ஒளி பொருந்தினவளும்!!”
4) அர்தேந்துசேகரா திவ்ய கிரீட பரிமண்டிதா
பாசாங்குசேக்ஷு கோதண்ட பஞ்சபாண லஸத்கரா
“பாதி சந்திரனை சிரஸில் சூடினவளும், திவ்யமான கிரீடத்தினை தாங்கியவளும், பாசம் அங்குசம் கரும்புவில் புஷ்பபாணம் இவற்றால் சோபிக்கும் நான்கு கரங்களை உடையவளும்”
5) தபனோடுப தாடங்கா மீனகுண்டல தாரிணி
திவ்ய ச்ருங்கார வேஷாட்யா திவ்யாபரண பூஷிதா
“சந்த்ர சூர்யர்களை தாடங்கங்களாய் உடையவளும், மீன் போன்ற குண்டலங்களை தரிப்பவளும், திவ்யமான ச்ருங்கார வேஷத்தை தரிப்பவளும், திவ்யாபரணங்களாலே ஜ்வலிப்பவளும்”
6) ரக்தாம்பரதரா ரக்த ராஜீவ வரமாலிகா
ஸௌபாக்யாபரணோபேதா திவ்ய மாங்கல்ய தாரிணி
“செக்கச்சிவந்த வஸ்த்ரத்தினை தரிப்பவளும், தாமரை மாலையை அணிபவளும், ஸௌபாக்யாபரணங்களால் ஜ்வலிப்பவளும், திவ்யமான திருமாங்கல்யம் விளங்கும் கழுத்தினளும்”
7) ராஜராஜேச்வரி ராமா மணிமஞ்சீர ராஜிதா
ஶ்ரீசக்ரநகராதீசா ஶ்ரீவித்யா பரமேச்வரீ
“ஶ்ரீராஜராஜேச்வரியும், சதங்கைகள் ஒலிக்கும் பாதத்தினளும், ஶ்ரீசக்ரநகரத்திற்கு ஈச்வரியும், ஶ்ரீவித்யா பரமேச்வரியும்”
8) சங்கராராதிதாகாரா சங்கராத்மஸ்வரூபிணி
சாரீரககலாதீசா ஸர்வ தத்வஸ்வரூபிணி
“சிவனால் ஆராதிக்கப்பட்டவளும், சிவனுக்கு ஆத்மஸ்வரூபமானவளும், அறுபதுத்துநான்கு கலை வடிவானவளும், ஸர்வ தத்வங்களுக்கும் ஆதாரமானவளும்
9) ப்ராணினி விச்வபூதஸ்தா காலசக்ரஸ்வரூபிணி
ஶ்ரீகாஞ்சிநகராதீசா காங்க்ஷிதார்த்தப் ப்ரதாயினி
“விச்வத்திற்கு ப்ராணணாகவும், காலசக்ரத்தின் வடிவினளாகவும், ஶ்ரீகாஞ்சிபுரத்திற்கு ஈச்வரியாகவும், விரும்பப்படும் இச்சைகளை அளிப்பவளும்”
10) ஸசாமர ரமா வாணி ஸவ்யதக்ஷிண ஸேவிதா
காமகோடீதி விக்யாதா காமாக்ஷி திவ்யமங்கலா
“ஒரு பக்கம் மஹாலக்ஷ்மியாலும் மறுபக்கம் ஸரஸ்வதியாலும் சாமரம் வீசப்பட்டு ஸேவிக்கப்படுபவளும், காமகோடி எனப் பெயர் பெற்றவளும், காமாக்ஷியும், திவ்ய மங்கல வடிவானவளும்”
11) ஸதாசிவாதி மூர்த்தீனாம் கௌர்யாதீனாம் ச காரணம்
ஜனனி சூதலிங்கஸ்ய சூத பீஜார்த்த ரூபிணி
“ஸதாசிவன் முதற்கொண்ட மூர்த்திகளுக்கும், கௌரி முதற்கொண்ட சக்திகளுக்கும் காரணமானவளும், ஏகாம்ரநாத ஸ்வரூபமான யசூதலிங்கத்தினை ஈன்றவளும், சூதபீஜார்த்த ரூபிணியும்”
12) சிவாதிகா சிவாங்கஸ்தா சிவமூர்த்திர் சிவங்கரி
மஹாகாமேசமஹிஷி மஹாத்ரிபுரஸுந்தரி
“சிவனுக்கு அதிகமானவளும், சிவாங்கத்தில் வீற்றிருப்பவளும், சிவமூர்த்தி வடிவானவளும், சிவத்தை அளிப்பவளும், மஹாகாமேச்வரன் பத்னியும், மஹாத்ரிபுரஸுந்தரியும்!!”
13) புராஹிதாய தேவானாம் பந்தகாஸுர மர்த்தினி
“முன்னொருகால தேவர்களுக்கு ஹிதம் செய்ய பந்தகாஸுரனை ஒழித்தவளுமான காமாக்ஷியை பஜிப்போம்!!”
ஶ்ரீலலிதாம்பாளின் இந்த த்யானத்தின் ஒவ்வொரு ச்லோகத்தின் விரிவான பொருளை அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்
ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம
ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:
— மயிலாடுதுறை ராகவன்