
Jaya Jaya Sankara Hara Hara Sankara – In this small chapter Sri Periyava gives a direct evidence as to how thinking about Bhagawathpadhal brings us peace and tranquility.
Many Jaya Jaya Sankara for Smt. Sowmya the drawing & audio and Shri ST Ravi kumar for the great translation. I was telling Sowmya this drawing was really exceptional…seems that Periyava is projecting out in very close proximity looking us us. Rama Rama
‘சம்’மைச் செய்வது; பிரத்யக்ஷச் சான்று
பரமசிவாவதாரமானதால் சிவநாமாவான ‘சங்கர’. வைசாக-சுக்ல-பஞ்சமி அவதார தினம் என்று காட்ட ‘சங்கர’. ‘சம்’ என்ற உசந்த சாந்தத்தை உண்டாக்குவதால் ‘சங்கர’. ப்ரேமையினால் விளையும் உசந்த சாந்தம்.
மூன்றாவதாக சொன்னது எத்தனை நிஜமென்பதற்கு இப்போது நாம் கூடியிருக்கும் இந்தக் கூட்டமே ப்ரத்யக்ஷமான ஸாக்ஷி. அத்தனை பேருக்கும் எத்தனை சாந்தியாயிருக்கிறது? ப்ரேமை நிரம்பியிருக்கிறது? அவர் நேரில் இல்லை. மறைந்து போய் 2500 வருஷமாகப் போகிறது. ஆனாலும் நினைக்கும்போதே, நினைக்கும்போதெல்லாம், பரம சாந்தியைத் தரும் பரம புருஷனாக இருக்கிறார்! இதே மாதிரி ஸினிமாவிலும் கூட்டம் சேர்கிறது. ஆனால் சாந்தி உண்டா? ப்ரேமை உண்டா? இல்லை. காமத்தில் கிளறிவிட்டு அசாந்தி உண்டு பண்ணுவதாகவே இருக்கும். அரசியல் கூட்டம் என்றாலும் நிறைய ஜனங்கள் சேர்கிறார்கள். ப்ரேமை உண்டா? சாந்தி உண்டா? இல்லை. எந்தக் கட்சியையாவது, கொள்கையையாவது திட்டி க்ரோதத்தைக் கிளறிவிடுவதாகவே இருக்கும். ஹர்த்தால், டெமான்ஸ்ட்ரேஷன் என்று ஊரின் சாந்தியையும் குலைப்பதற்குத் தூண்டுவதாகவே இருக்கும். இங்கே இத்தனை உத்ஸவப் பரபரப்பிலும் மனஸுக்குள் பரம சாந்தியாயிருக்கிறது. “சம் கரோதீதி சம்கர:” — இன்பத்தில் பெரிய இன்பமான ‘சம்’ என்னும் சாந்தியை உண்டு பண்ணுவதால் சங்கரர் என்ற பேர் — என்பதற்கு proof-ஆக இந்தக் கூட்டமே இருக்கிறது! இதைவிட பாக்யம் என்ன இருக்கிறது? பணத்திலும் பதவியிலும் இது இல்லை. அவை ஏற ஏற, இருக்கிற சாந்தியும் போய்விடும்! ஆசார்யாளை நினைத்தால் க்ஷணமானாலும் சட்டென்று ஒரு சாந்தி! நினைக்கணுமே! அதற்காகத்தான் உத்ஸவம் பண்ணுங்கள், எல்லாவற்றையும் விடப் பெரிய உத்ஸவமாகப் பண்ணுங்கள் என்கிறேன்.
____________________________________________________________________________________________
Doing ‘Sam’; Direct evidence
He was the incarnation of Lord Paramasiva; hence [he is] ‘Sankara’ – one of the many names of Siva. To denote that the day of incarnation is Vaisaka-Sukla-Panchami, [he is named] ‘Sankara’. Being the creator of ‘Sam’, the ultimate peace [he is] ‘Sankara’; the ultimate peace produced by love.
This very gathering where we have all assembled is visible proof to show how true the third [reason] is. How peaceful everyone here feels? How everyone is filled with love? He is not here in person. It is 2500 years since he is gone. Still, the very thought of him and also whenever we think about him, he is there as the Supreme Being who gives us absolute peace! There is a similar crowd even for cinemas. But is there peace? Is there love? No. It will only induce lust and create restlessness. A lot of people gather even for political meetings. Is there love? Is there peace? No. It would only be an exercise in abusing some party or principle and stirring up hatred. It would only be instigating a hartal or a demonstration, which will disturb the peace of that place. Here, in spite of the busy activities related to the holy celebration, there is absolute peace in the heart. “sam karoteeti samkara:” [शम् करोतीति शम्करः] – he has the name Sankara since he is creating ‘Sam’ – peace, which the highest of all happiness; this very gathering is proof for that name! What bigger fortune can be there than this? This [peace] is not present in wealth and status. As they increase, whatever peace is there will also leave! There is instant peace if we think about Acharya even for a moment. But one should think [of him]! That is why I keep exhorting you all to perform this utsavam [Acharya’s jayanti] and to make this celebration much bigger than any other.
___________________________________________________________________________________________
Audio