Sage of Kanchi

மஹாபெரியவா என்ற நல்லாசிரியர் – ஷட்பதீ ஸ்தோத்ரம் பொருளுரை


ஒரு மகான் தன்னுடைய தவத்தாலும், அனுக்ரஹ சக்தியினாலும், ஒழுக்கத்தாலும், கருணையினாலும் பாமர ஜனங்களின் மனதில் இடம் கொள்கிறார். ஆனால் ஆச்சார்ய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ஒரு மகான், சிறந்த பண்டிதராகவும், விஷயங்களை எடுத்து சொல்வதிலும், தெளிவு படுத்துவதிலும் திறமை வாய்ந்தவராக இருந்தால் மட்டுமே பண்டித லோகத்தில் அவர் ஏற்றுக் கொள்ளப் படுகிறார். நம் மஹாபெரியவா அப்படி பண்டிதர்களும் பாமரர்களும் போற்றிய ஒரு மகான். மஹாபெரியவா சௌந்தர்ய லஹரியில் பவானித்வம் என்ற ஸ்லோகத்துக்கு அர்த்தம் சொல்வதைக் கேட்டுப் பாருங்கள். ஒரு நல்ல ஆசிரியர் பாடம் எடுப்பது போல, ஆசையாகவும், மிகவும் பொறுமையாகவும் விஷயங்களை எடுத்துச் சொல்கிறார்கள். முதலில் பதங்களின் பொருளையும், பின்னர் அதிலுள்ள விசேஷங்களையும் விளக்கி, படிப்படியாக உயர்ந்த அத்வைத தத்துவத்தில் கொண்டுபோய் முடிக்கிறார்கள்.

அதேபோல் தெய்வத்தின் குரல் நான்காம் பகுதியில் ‘வண்டு ஸ்தோத்திரம்’ என்ற தலைப்பில் மஹாபெரியவா ஆதிசங்கரரின் ஷட்பதி ஸ்தோத்திரத்திற்கு அர்த்தம் சொல்லி இருக்கிறார்கள். அதில் சந்தங்களின் பல விதங்களை விளக்கியுள்ளார்கள். கவிதைகளை ரசிப்பதற்கு கற்றுத் தருகிறார்கள். என் குருநாதரும் புராணக் கதைகளை சொல்லும் விதத்திலேயே, அவற்றின் தத்துவங்களும் மனதில் பதியும்படி சொல்வார்கள். அந்த மகான்களை நினைத்துக் கொண்டு, பெரியவா சொன்ன வண்டு ஸ்தோத்திரத்தை எளிய விதத்தில் சொல்லி இருக்கிறேன். புரிகிறதா என்று கேட்டு சொல்லுகள்.

Exit mobile version