
இப்போது நாம் பணத்தாலும் உடைமைகளாலும் லக்ஷரிகளாலுந்தான் அந்தஸ்து என்று ஆக்கிக் கொண்டு, இதைத் தேடிக் கொண்டே போவதில் சீலங்களை இழந்து, சீலத்தாலேயே நம் முன்னோர்கள் எந்தச் சொத்துமில்லாமலும் பெற்றிருந்த ஸமூஹ கௌரவத்தையும் அடியோடு இழந்து, ரொம்பக் குறைந்தவர்களாக நிற்கிறோம். உடைமைகளைச் சேர்த்துக் கொள்ளக் கொள்ள பயந்தான் ஜாஸ்தியாகிறது. அபரிக்ரஹத்தின் நிம்மதி இங்கே ஒருகாலும் கிடைக்காது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
But now we value our status only in terms of money, possessions, and luxuries. Due to that avarice, we go more and more in search of money. Consequently we have completely lost our character and the respect in society, which our forefathers had in abundance though they did not possess any riches. Because of this today, we stand very low in the society. As you go on accumulating possessions it only results in more and more fear. The peace which we gain by ‘Non-Possession’ (Aparigraha) can never be experienced in this situation. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal