Site icon Sage of Kanchi

அவனைக் கேட்க வேண்டாம்

Thanks Sri Varagooran mama…
Periyava is avyaja karuna muthi!!!
Thanks Sudhan for the beautiful drawing.

தொகுப்பு-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
 
ஒரு சமயம் பெரியவாளுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. சாத்துக்குடிப் பழச்சாறு கொடுக்கும்படி கூறியிருந்தார் வைத்தியர்.
 
ஒரு பக்தருக்கு இந்தச் செய்தி தெரிந்தது. தினந்தோறும்,சுவையும் சாறும் மிக்க சாத்துக்குடிப் பழங்களைத் தேடி கண்டுபிடித்து கொண்டு வந்து கொடுத்தார். அவற்றைப் பிழிந்து,பெரியவாளுக்குக் கொடுத்து வந்தார்கள் தொண்டர்கள். 
ஒரு நாள் வழக்கமாக சாத்துக்குடிப் பழங்களை வைக்கும் இடத்தில் அவற்றைக் காணோம்! பல இடங்களில் தேடியும் ஒரு பழம் கூடக் கிடைக்கவில்லை
யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள் என்பது புரிந்தது.
 
பிறகு,வேறு வழி தெரியாமல் கண்ணில் பட்ட இரு மாதுளம் பழங்களைப் பிழிந்து பெரியவாளுக்குக் கொடுத்தார்கள் அணுக்கப் பணியாளர்கள்.
 
சாத்துக்குடி காணாமற்போன விஷயம் மெல்லக் கசிந்து பெரியவா செவிகளுக்குப் போய்விட்டது.
 
“அவன் (பெயரைச் சொல்லி) வீட்டில் குழந்தைகளுக்கு அம்மை போட்டிருக்கு. பழம் வாங்கிக் கொடுக்க வசதி போதாது.அதனாலே சாத்துக்குடியை எடுத்துப்
போயிருக்கான். குழந்தைகளிடம் பாசம்! வேற என்ன செய்வான்?…அவனைக் கேட்க வேண்டாம்” என்று சொல்லியதுடன் நிறுத்தவிடவில்லை பெரியவா!
 
“நாளைலேர்ந்து தினமும் அவன் வீட்டுக்கு ஆறு சாத்துக்குடி,ஆறு மாதுளை,இரண்டு இளநீர் அனுப்பி விடு”
 
ஒரு வாரம் சென்றது.
 
“அம்மை இறங்கிவிட்டது.குழந்தைகளுக்கு ஸ்நானம் செய்து வைத்துவிட்டோம்” என்று இளகிய குரலில் விண்ணப்பித்துக் கொண்டார் அந்தத் தொண்டர்.
 
காவி அம்மை தான், மாரி அம்மையைக் கட்டுப்படுத்தினாள் என்பது மிக நெருக்கமான
கைங்கர்யபரர்களுக்கு மட்டுமே தெரியும்.
Exit mobile version