Found this in FB….Forgot to capture the name of the devotee who posted this….Thanks to him/her…What an amazing experience?
என் சத்யத்தினை காப்பாற்றி தர்மத்தினை நிலை நாட்டச் செய்ததற்காக அவருக்கு நன்றி கூறினேன்!
மாத இதழ் ஒன்றில் ஸ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்கருகலைப்பு செய்தல் பாவம் என்ற அறிவுரை ஒன்றைப் படித்தேன். உடனே நான், அவரை சாக்ஷியாக வைத்து, வாழ்வில் இத்தகைய செயலைச் செய்வதில்லை என
உறுதி எடுத்துக் கொண்டேன்.
எங்களுக்கு ஒரு வயது பெண் குழந்தை இருக்கும்போதே என் மனைவி மீண்டும் கருவுற்றாள். குறைந்த இடை வெளியில் குழந்தை வேண்டாம் எனக் கருதிய அவள் கருகலைப்பு செய்வதில் தீர்மானமாக இருந்தாள் நானும் என் அம்மாவும் எவ்வளவோ எடுத்துரைத்தும். குடும்பத்தில் அமைதி குறைந்தது. அவளின் வற்புறுத்தலால் மருத்துவரிடம் சென்றோம். அவர் ஒரு வருட இடைவெளியாதலால் செய்ய மறுத்து விட்டார். மற்ரொரு மருத்துவரிடம் போன் மூலம் தொடர்பு கொண்டதில் அழைத்து வருமாறு சொன்னார். நான் மட்டும் கனத்த இதயத்துடன் இது நடக்கக் கூடாது என்று மனதில் ப்ரார்த்தனை செய்தவாறே அறைக்குள் நுழைந்தேன்.
அறையில் மருத்துவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு மேல் ஒரு மஹானின் படம்! மிக்க ஒளி வீசும் கண்களுடன்! அவர் என்னைப் பார்த்து ”என்ன உன் சங்கல்பம் இவ்வளவுதானா?” என்று என்னைக் கேட்கிறாற்போல் எனக்குத் தோன்றிற்று. அவரின் ஆசிர்வதிக்கும் கை இயற்கையால் நோய்வாய்ப் படுவோரை குணமடைய ஆசிர்வதிப்பது போலவும், கருகலைப்பு போன்ற செயல்களுக்காக வருவோரை அது போன்று செய்யவேண்டாம் என் தடுப்பது போலவும் எனக்குத் தோன்றிற்று. அந்தக் கையிலிருக்கும் நடுவிரல் ஆதி சங்கரர் கூறியது போல் ப்ரம்மம் என்ற மெய்ப் பொருள் ஒன்றே அதுவும் ஆன்மாவும் ஒன்றே என உணர்த்தி, ஆண்டவனால் படைக்கப்பட்ட ஆன்மாவை அழிப்பது முறையன்று; திரும்பிச் செல் என்று எனக்கு உணர்த்தியதுபோல் உணர்ந்தேன்.
நான் மீன்டும் என் மனைவியிடம்” திரும்பிச் சென்றுவிடலாம்” என்று கூறினேன். மனதிற்குள் ”இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பது உண்மையானால் நீரே மருத்துவரின் மனதில் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள்” எனப் ப்ரார்த்திதவாறே அந்தப் படத்தை நோக்கினேன்.
மருத்டுவரிடம் சில வார்த்தைகள் பேசினோம்; அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை செய்கிறேன் என உறுதி கூறியவர் தன்னால் முடியாது என்று மறுத்துவிட்டார்!
மீண்டும் அந்த ஃபோடோவைப் பார்க்கிறேன் . என் சத்யத்தினை நிலை நாட்டச் செய்ததற்காக நன்றி கூறினேன். அவர் யாருமல்ல! நம் காஞ்சி ஸ்வாமிகள் ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தாம்.
நாட்கள் நகர்ந்தன. பிறந்தது மறுபடி பெண்குழந்தை! நம் ஸ்வாமிகள் வணங்கிய காமாக்ஷி அன்னை! மஹாபெரியவாளின் அறிவுரையும் அவர் என்னைக் காபாற்றியதையும் என்னால் வாழ் நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி.
இவ்வாறு ஐயன்பேட்டை திரு அனந்தராமன் அவர்கள் நெகிழ்ச்சியுடன் தரிசன அனுபவங்கள் 4ஆம் தொகுதியில் நம்முடன் பகிந்து கொள்கிறார்.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர காஞ்சி சங்கர காமாக்ஷி சங்கரா
