Site icon Sage of Kanchi

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாள் கராவலம்பம் ஸ்தோத்ரம்

periyava_mena

I was recently told about this great stotram by Shri Ganesh Kumar and Shri Subash mama. I also understand that this is chanted first thing in the morning to offer our very first prayer to Mahaperiyava. I have been doing this for the past few months now. I do not have the sanskrit version. Also I intentionally did not try to do any English version without knowing the proper pronunciation – unfortunately Tamil can’t help there. So, I would leave this task to some good sanskrit folks in the forum.

My personal request to sanskrit scholors here: Can one of you please try to do a translation of this great stotram?

Click here for audio link/download from Kamakoti site.

ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாள் துணை

 ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாள் கராவலம்பம் ஸ்தோத்ரம்

ப்ராதஸ்மராமி பவதீய முகார விந்தம்

மந்தஸ்மிதம் ச ஜனிதா பஹாரம் ஜனனாம்

சம்பத்கரீம் ச பவதோத்ர கடாக்ஷ லக்ஷ்மீம்

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(திருமுகத்தின் அழகு பவத்தை நீக்கும். குறுநகை பிறந்திட மக்களின் பிறவிப் பிணி தீர்ந்துவிடும்
அருள்விழிப் பார்வையாலே பவவினை ஒழிந்து செல்வத்தை அருளும். இந்தக் குணாதிசயங்கள் நிறைந்த காஞ்சி மடத்தின் அதிபதியைக் காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன், என்னைக் கைத்தூக்கி அருளுமாறு வேண்டுகிறேன்.!)

ப்ராதஸ்மராமி கலிதோஷ ஹராணி யாணி

ஹ்ருத்யானி த்வய மதுராணி மனோஹராணி

வாக்யானி தேத்ய வதனாம் புஜ நிர்கதானி

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(கலிதோஷத்தை நீக்குபவரே! அருளிதயம் கொண்டு, அங்கிருந்து பிறக்கும் தங்கள் தேமதுரமான வாக்கின் மூலம் எங்கள் இதயத்தை மலரச் செய்பவரே! கதியற்றவரை தாமரை போன்ற அருள் விழிகளால் கடைத்தேற்றுபவரே! காஞ்சி மடத்தின் அதிபதியே! காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன். கை தூக்கி எனக்கருளுங்கள்.)

வக்ஷஸ்தலம் விமலஹேம சமான வர்ணம்

பஸ்மாங்கிதம் ஜனமனோஹர குங்குமார்தம்

ப்ராதஸ்மராமி பவதோத்ர சிரம் மஹாத்மன்

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(க‌ல‌ப்ப‌ட‌ம‌ற்ற‌த் த‌ங்க‌த்தைப் போன்றப் பொன்னிறமானத் திருமார்பு முழுவதும் திருவெண்ணீற்றாலும், குங்குமத்தாலும் பூசி [பார்க்கின்ற‌] ஜ‌னங்க‌ளின் ம‌ன‌தை இனிமையாக்குப‌வ‌ரே! எனது ப‌வ‌வினை தீர்ந்து என்னை மேலுய‌ர்த்திச் செல்ல‌க் காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன். காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌)

மத்தேவ துல்ய கமனம் ச நிரீஷ்ய தேத்ய

யாத்வா வனாந்தர மனந்த கஜாச்சலீன:

ப்ராதஸ்மராமி கஜராஜ கதிம் தவேதம்

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(ந‌டையிலும், கூரிய‌ பார்வையிலும், வ‌ன‌ங்க‌ளில் திரிவ‌திலும் ம‌த்த‌க‌ஜ‌த்தை ஒத்த‌வ‌ரே!
க‌ஜ‌ராஜ‌னுக்கு ந‌ற்க‌தி அளித்த‌துபோல‌ என‌க்கும் ந‌ல்கிட, காலையிலே நினைத்துத் துதிக்கின்றேன்.
காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌ )

தக்க்ஷேண தண்ட மவலப்ய ஸதைத்ய ரேண:

ஹஸ்தேன சாரு கலசம் ச விராஜ மானாம்

ரக்தாம்பரம் ச தவசாரு கடீஸ்மராமி

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(வ‌ல‌க் க‌ர‌த்தில் த‌ண்ட‌மும், இட‌க் க‌ர‌த்தில் கமண்டலத்தையும் தாங்கி, ஒளிர்கின்ற‌ ர‌க்த‌ வ‌ர்ண‌ மேலாடையை அணிந்து நிற்கும் திருக்கோல‌த்தை நினைத்துத் துதிக்கின்றேன். காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌ .)

விஸ்ம்ருத்ய தோஷமகிலம் ச ஸமமாப்ராதும்

த்ராதும் ச யாத்ய பகவன் க்ருதபக்த தீக்ஷா:

ப்ராதஸ்மராமி யதிபுங்கவ தேனுகம்பாம்

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(குறைக‌ளை, தோஷ‌ங்க‌ளை எல்லாம் ம‌ற‌ப்ப‌வ‌ரே! குற்ற‌‌ங்க‌ளை எல்லாம் ம‌ன்னிப்ப‌வ‌ரே!
அனைத்தையும் பொறுத்து ப‌க்த‌ர்க‌ளுக்கு அருட்பார்வை அளிக்கின்ற‌ ப‌க‌வானே!
அருட்பாலைப் பொழிகின்ற‌ உத்த‌ம‌மான‌ ப‌சுவைப் போன்ற‌வ‌ரே! காஞ்சி ம‌ட‌த்தின் அதிப‌தியே!
கைதூக்கி எனக்கு அ‌ருளுங்க‌ள்‌ )

ப்ராதஸ்மராமி பவதீய பதாரவிந்தம்

யஸ்மாத் ப்ராயந்தி துரிதாணி மஹாந்திதாணி

ஆயாந்தி தாணி முஹருத்ய சுமங்களானி

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(எந்த மஹானுடைய திவ்ய சரணார விந்தங்களைத் துதித்தால், அனைத்துவிதமான மஹா துன்பங்களும் ஓடிவிடுமோ, ஸர்வ மங்களங்களும் தேடி ஓடிவருமோ,[அத்தகையப் பெருமை வாய்ந்த] காஞ்சி மடத்தின் அதிபதியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்கள்.)

ஸ்னானாச்ச பானாச்ச நிஷேவனாச்ச

த்யானாச்ச பாபநிலயம் ப்ராயாந்தி

ஹேதீர்த்த பாதானு சர்வ பதம்தே

தீர்த்தம் ச தீர்த்தி சரணம் பஜாமி

காஞ்சீ மடேச மமதேஹி கராவலம்பம்

(குளிக்கும்போதும், உண்ணும்[குடிக்கும்]போதும், தனியே] துதிக்கும்போதும், தியானம் புரியும்போதும், [எந்த] தீர்த்தபாதரை நினைத்துத் துதித்தால் ஸர்வ பாபங்களும் விலகி ஓடிவிடுமோ, [அவரை நினைந்து]ஸர்வ பதம் தந்தருள்க என வேண்டி, நல்வழி காட்டுக என இந்தத் தீர்த்தத்தால் துதிக்கிறேன். காஞ்சி மடத்தின் அதிபதியே! கைதூக்கி எனக்கு அ‌ருளுங்கள்.)

Sanskrit Version::

1. प्रतस्मरामि   भवदीय   मुखारविन्दम्  |
 
मन्दस्मितं   च  जनितापहारम्    जननानं ||
 
संपत्करीं  च    भवतोद्धरकटक्ष लक्ष्मीम्  |
 
काञ्ची  मठेश   मम देहि  करावलम्बम्  ||
 
2. प्रतस्मरामि   कलिदोषहरणि यानि   |
 
ह्रुद्यानिदिव्यमधुराणि  मनोहराणि  ||
 
वाक्यानि त्वदीय   वद्नांबुज  निर्गतानि  |
 
काञ्ची   मठेश   मम देहि  करावलम्बम्  ||
 
3. वक्षस्थलं विमलहेमसमानवर्णम्  |
 
भस्माङ्गितं जनमनोहर  कुम्कुमार्तम् ||
 
प्रतस्मरामि  भवतोद्धरशिरं   महात्मन्  |
 
काञ्ची  मठेश   मम देहि  करावलम्बम्  ||
 
4. मत्देव  तुल्यगमनं च निरीक्ष्यत्वदीय  |
 
 यात्वा   वनान्तरम्  अनन्त  गजाश्चलीन : ||
 
प्रतस्मरामि  गजराजगतिम्  तवेदम् |
 
काञ्ची  मठेश   मम देहि  करावलम्बम्  ||
 
5. दक्षेणदण्डम्  अवलभ्य सोत्तरेण  |
 
हस्तेन चारुकलशम्  विराजमानम्  ||
 
रक्ताम्बरं  च तवचारु  कटीस्मरामि  |
 
काञ्ची  मठेश   मम देहि  करावलम्बम्  ||
 
6. विस्मृत्य  दोषमखिलम् च  क्षममाप्रदातुम् |
 
त्रातुं च  यात्य   भगवन्  कृतभक्त  दीक्षा : ||
 
प्रतस्मरामि  यतिपुङ्गव  धेनुकम्पाम् |
 
काञ्ची  मठेश   मम देहि  करावलम्बम्  ||
 
7. प्रतस्मरामि  भवदीय  पदारविन्दम्  |
 
यस्मात्  प्रयान्ति  दुरितानि  महान्तितानि ||
 
आयन्ति तानि  मुखरुह्य  सुमनगलानि |  
 
काञ्ची  मठेश   मम देहि  करावलम्बम्  ||
 
8.  स्नानाश्च   पानाश्च  निशेवनाश्च |
 
ध्यानाश्च  पापानि लयं  प्रयान्ति ||
 
हे तीर्थपदानु   सर्वपदं ते |
 
तीर्थं च तीर्थि  चरणं  भजामि ||
 
काञ्ची  मठेश   मम देहि  करावलम्बम्  ||
Exit mobile version