Site icon Sage of Kanchi

ஶ்ரீதுர்கா ஸஹஸ்ரநாம பாஷ்யம் பூர்வ பாகம் 1:

 

 

ஶ்ரீமாத்ரே நம:

அனைவருக்கும் நமஸ்காரம்,

ஶ்ரீராஜராஜேஶ்வரியான பராபகவதியின் பரம மங்களமான ஸ்வரூபம் ஶ்ரீதுர்கா பரமேஶ்வரி. தஶமஹாவித்யைகளும் ஶ்ரீதுர்கா பரமேஶ்வரியின் தேஹத்திலிருந்து தோன்றிய விஷயத்தை ஶ்ரீமத் தேவீ பாகவதம் கூறும்.

அத்தகைய மஹாதுர்கையின் ஆலயங்கள் கன்யாகுமரி முதல் காஷ்மீரம் வரை, த்வாரகா முதல் காமரூபம் வரை அனேகம். பாரதமே மேலே விரிந்து, கீழே குறுகி ஶ்ரீபராஶக்தியின் யந்த்ர வடிவில் தானே விளங்குகின்றது.

மஹாதுர்கையின் ஸஹஸ்ரநாமங்கள் அனேகம் எனினும், மிக உயர்வானது தந்த்ரராஜம் எனும் மஹாதந்த்ரத்தில் விளங்கும் ஶ்ரீதுர்கா ஸஹஸ்ரநாமம்.

ஶ்ரீபரமஶிவ பட்டராகர் அன்னை ஶ்ரீபார்வதி தேவிக்கு, அவளின் மூல ஸ்வரூபமான ஶ்ரீதுர்கா பகவதியின் ஸஹஸ்ரநாமத்தைச் சொல்வதாக ஶ்ரீதந்த்ரராஜ தந்த்ரம் கூறுகிறது.

அத்தகைய ஶ்ரீதுர்கா ஸஹஸ்ரநாமத்தின் பூர்வ உத்தர பாகங்களுடன் ஆயிரம் நாமங்களுடைய விளக்கமும் இன்று முதல் “குருவடி” எனும் யூட்யூப் சேனலில் தினமும் ஒளிபரப்பாகிறது.

அனைவரும் ஶ்ரீதுர்கா ஸஹஸ்ரநாமத்தின் விளக்கத்தைக் கேட்டு ஶ்ரீபராஶக்தி மஹாதுர்கையின் அருளுக்கு பாத்திரர்களாகப் ப்ரார்த்திக்கிறோம்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

 

Exit mobile version